📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 சனவரி - 30 வியாழன் 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 சனவரி - 30 வியாழன் 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 சனவரி - 30 வியாழன் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சுபீட்சம் - செழிப்பு
➖➖➖➖➖➖➖➖➖➖

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

வதோதரா: நாளைமறுநாள் ( பிப்.1 ம் தேதி) தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பல்கலை., மானியகுழு கமிஷன் சேர்மன் டி.பி.சிங் வலியுறுத்தி உள்ளார்.

தியாகிகள் தினம்- மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் 1.23 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தினர்.

இன்று நடைபெற இருந்த சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி : இயற்கை எரிவாயுவை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் ஆபாச படம் பார்த்த இளம் பட்டதாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுடில்லி : டில்லியில் காற்று மாசுவை கட்டுக்குள் கொண்டுவர மக்களிடம் வசூலிக்கப்பட்ட பசுமை செஸ் வரியை டில்லி அரசு தவறாக பயன்படுத்தியது என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பதும், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டதும் அம்பலமாகி இருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை  கணக்கெடுப்பை நடத்துவதற்கு நடுவன் அரசு முன்வர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

டாவோஸ் : “இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது; நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது,” என, பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார்.

தொடர்ந்து எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சபர்மதி ஆற்றை காண வருகிறார் என குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பிடியில் இருந்த 62 ராணுவ அதிகாரிகள் விடுவிப்பு

புவனேஸ்வர்: நகர பஸ்களில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிக்க, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும்: மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

புதுடில்லி: உலகத்திலேயே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களில் பெங்களூரூ முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜப்பானின் ஒகினாவா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு

புதுடில்லி: கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் இந்திய தலைவர்கள் பேசி வருகின்றனர் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

சென்னை: புரோக்கர்களின் புகலிடமாக மாறிவிட்டது டி.என்.பி.எஸ்.சி. என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மும்பை-ஐதராபாத், சென்னை-மைசூரு இடையே அதிவேக ரெயில் பாதை: மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்

புதுடில்லி: டில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படைகள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய பொருளாதாரத்தை குப்புற தள்ளிவிட்டார்: மோடி மீது, ராகுல் காந்தி கடும் தாக்கு

மதுரை செல்லம்பட்டியில் எஸ்.சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சென்ட்ராகவன். 6 ஏக்கர் நிலத்தில் நபார்டு வங்கி உதவியுடன் பழமரக் கன்றுகளை நட்டு பயன்பெற்று வருகிறார்.

இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும்

சென்னை: சுங்கச்சாவடிகளில், அத்துமீறும் ஊழியர்களால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 22-ந் தேதி திறப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

டெல்லி தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

அமிர்தி பூங்கா அருகே வனப்பகுதிக்கு கல்லூரி மாணவியை கடத்திய காதலன் நண்பர்களுடன் கற்பழிக்க முயற்சி - மலைவாழ் மக்கள் மீட்டனர்

கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

திருச்சி தனியார் மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு டாக்டர் தற்கொலை - திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் விபரீத முடிவு

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.715 கோடி ந‌‌ஷ்டம்

குடிபோதையில் தகராறு; வடமாநில வாலிபர் குத்திக்கொலை - நண்பர் கைது

ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா?

ஈரோட்டில் துணிகரம்: கட்டிட காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை கொள்ளை

டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் பள்ளி மாணவிக்கு விருது - பிரதமர் மோடி வழங்கினார்

மராட்டிய ஓபன் டென்னிஸ் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்பு

வட்டிக்கு கடன் கொடுத்ததை தொழிலாக கருத முடியுமா?: உயர்நீதிமன்றத்தில் ஐ.டி தாக்கல் செய்த மனுவில் நடிகர் ரஜினி தெரிவித்த கணக்கு

“திருமணம் செய்து கொண்டு தாயாக ஆசை” -கங்கனா ரணாவத்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார் நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை குற்றவாளி வினய் சர்மா

டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் இன்று முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை: மத்திய மந்திரி பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார் நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை குற்றவாளி வினய் சர்மா

பீமா-கோரேகாவ் வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையில் சந்தேகம்: சிவசேனா குற்றச்சாட்டு

நித்தி-யின் நெருங்கிய சீடர் புதுச்சேரியில் மர்ம கொலை: பணத்திற்காக கடத்தி கொலை செய்யப்பட்டாரா?... போலீசார் விசாரணை

விலை உயர்வை கட்டுப்படுத்த எகிப்து நாட்டில் இருந்து 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி

மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை

கா்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; மேலிடதலைவர்களை சந்திக்க எடியூரப்பா இன்று டெல்லி பயணம் - இழுபறிநிலை முடிவுக்கு வருமா?

பல்லடம் அருகே மணல் கடத்தல் லாரியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது - மேயர்- சுவர்ணா சங்கர், துணை மேயர்- சுரேகா

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால் பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் வெடிக்கும் - பரமேஸ்வர் சொல்கிறார்

ராணிப்பேட்டை அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆந்திராவில் கன்னட பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் - ஜெகன்மோகன்ரெட்டிக்கு, கர்நாடக மந்திரி கடிதம்

நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

தாவணகெரே அருகே, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேலும் 10 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

கணவன், மனைவிக்குள் போட்டி கூடாது - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்காக புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது சரியானது அல்ல - அன்பழகன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.19 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.09காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages