அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*ஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஏமாற்றிய ஸ்பெயினின் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் ரபெல் நடால், 5வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர்.
நான்கு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் தியம் 7-6, 7-6, 4-6, 7-6 என வெற்றி பெற்றார்.
இத்தோல்வியின்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெடரருடன் (20) பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நடால் (19) கோட்டைவிட்டார்.
*தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு:
நிர்வாக காரணங்களுக்காக எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் ரத்து, புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - கட்டுமான தொழிலாளர் நல வாரியம்.
*சிறையில் இருப்பவரை திருமணம் செய்ய மணமகள் சம்மதம் தெரிவித்ததால், கைதிக்கு உடனடி ஜாமீன்:
விசாரணை கைதி வெங்கடேஷிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. திருமணம் வெட்கடேஷின் வாழ்க்கையில் மாற்றத்தை அளிக்கும் என நம்புகிறேன் - நீதிபதிகள் கருத்து.
*சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு:
சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு.
*டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட காவலர் சித்தாண்டி குடும்பத்துடன் தலைமறைவு என தகவல்:
முறைகேடு தொடர்பாக சித்தாண்டியின் தம்பியை சென்னை அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை.
*இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச் மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்திவைப்பு. இன்று நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பு திடீரென ஒத்திவைப்பு.
*மகாத்மா காந்தியின் நினைவு தினம் : சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை:
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் மகாத்மா காந்திக்கு மரியாதை.
*குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது; தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம்:
குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை.
- டிஎன்பிஎஸ்சி விளக்கம்.
*கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு:
தெலங்கானாவில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு.
*திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் வரும் 5ம் தேதி முதல் மார்ச் 10 வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
*சர்ச்சை பேச்சு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் 3 நாட்களுக்கும், எம்.பி., பிரவேஷ் வர்மா 4 நாட்களுக்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
*சபரிமலை விவகாரத்தில் தொடர்புடைய மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி. 3ம் தேதி முதல் விசாரணை.
*கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்து கலந்தாலோசிக்க சுகாதாரத் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு - சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அழைப்பு விடுத்துள்ளார். திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
*குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரணை:
- சென்னை உயர்நீதிமன்றம்.
*குரூப் 1 தேர்வு முறைகேடு குறித்த புகார் வழக்குகளை உடனே விசாரிக்க வழக்கறிஞர்கள் முறையீடு.
*டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு.
CAA சட்டத்திற்கு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பதால் பரபரப்பு.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் என தகவல்.
*டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை;
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப் 4 தேர்வில் 5 விதமான விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிப்பு.
*கேரளாவில் கொரானா வைரஸ் அறிகுறிகள் உள்ள 4 பேரில் ஒருவருக்கு உறுதி:
வைரஸ் பாதிப்பு அறிகுறியுள்ள 4பேருக்கும் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
சீனாவில் இருந்து கேரளாவுக்கு வருபவர்கள் கண்டிப்பாக சுகாதாரத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். - கேரள அமைச்சர் சைலஜா.
*ராமநாதபுரம் : லஞ்சம் வாங்கிய பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் ராஜராஜன், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது.
*ஆதாரமற்ற பதிவுகள் - தனிப்பிரிவு ஏற்படுத்துக:
சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்க தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தல். - சென்னை உயர்நீதிமன்றம்.
*நிர்பயா வழக்கில் பிப்.1ம் தேதி விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி குற்றவாளிகள் தொடர்ந்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு.
நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறை நிர்வாகத்துக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு.
*சென்னை துறைமுகத்திற்கு சீன மருத்துவக் கழிவுகளுடன் கப்பல் வந்தது, உண்மைக்கு புறம்பானது - சென்னை துறைமுக நிர்வாகம்.
*சீனாவிலிருந்து புதுக்கோட்டை வந்த 6 பேரும், தினமும் 2 முறை மருத்துவ பரிசோதனை செய்யவும், 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் சுகாதாரத்துறை உத்தரவு.
*இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.19 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது.
தொழில் துறையில் முன்னனி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.
*தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி. 3ம் தேதி விசாரணை.
*2014-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் வீட்டின் அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய, 6 பேருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு.
கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை 21 விமான நிலையங்களில் 234 விமானங்கள், 43346 பயணிகள் பரிசோதிக்கப்படுள்ளனர். நாளை முதல் சென்னை உள்ளிட்ட மேலும் 6 நகரங்களிலும், பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளன - மத்திய சுகாதாரத்துறை.
No comments:
Post a Comment