📰 நாளிதழ் செய்திகள்📰    🗓 சனவரி - 31 வெள்ளி 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰    🗓 சனவரி - 31 வெள்ளி 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 சனவரி - 31 வெள்ளி 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சுபாவம் - இயல்பு
➖➖➖➖➖➖➖➖➖➖

உத்தரப் பிரதேசத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

கரூர்: அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை போலீசார் சோதனை நடத்தினர்.

ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலையின் ஊழியர் சக ஊழியர் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.

பெ.நா.பாளையம்:தமிழக அரசு, தற்போது பயன்பாட்டில் உள்ள உழவன் செயலியில், 3 புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.தமிழக வேளாண் துறையின், உழவன் செயலியில், அந்தந்த பகுதி விவசாயிகள், 'ஸ்மார்ட் போன்' வாயிலாக, பருவ நிலை, பயிரிட வேண்டிய பயிர் ரகங்கள், பூச்சி மருந்து, உரம், வேளாண் அலுவலர்கள் வரும் தேதி, நேரம் மற்றும் வேளாண் துறை தொடர்பான ஆலோசனைகளை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் : சீனாவில் பலி எண்ணிக்கை 213 ஆக உயர்வு

புதுடில்லி : டில்லி ஜாமியா பல்கலை.,யில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து , போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நேற்று முதல் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் வைத்து சிகிச்சை சீனாவில் இருந்து இந்தியா வந்த கேரள மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது.

சென்னை: 'முரசொலி மூலப்பத்திரம் தொடர்பாக, சவால் விட்டவர், அரசியலில் இருந்து விலகுவாரா' என, ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழிற்சாலைகளை அமைப்பதற்கான வேளாண்மை துறையின் தடையில்லா சான்று 30 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை : ஊதிய உயர்வு உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், 10 லட்சம் பேர், இன்றும், நாளையும்(ஜன.,31, மற்றும் பிப்.,1) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

குரூப்-4 தேர்வு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.

கோரக்பூர்: “பாகிஸ்தானுக்கு ஆதரவாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம்” என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

நீண்ட இழுபறிக்கு பிறகு ‘பிரெக்ஸிட்’ ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து இன்று வெளியேறுகிறது

புதுடில்லி: மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தொழிலாளர் சேம நல நிதியத்தில், 80 ஆயிரம் நிறுவனங்களைச் சேர்ந்த, 9 லட்சம் தொழிலாளர்கள் மூலம், 300 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரஷியாவில் நடுக்கடலில் சிக்கிய 600 மீனவர்கள்

ஐதராபாத்,: தெலுங்கானாவில், தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நாளை பட்ஜெட் தாக்கல்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

புதுடில்லி: 'மாம்பழம் உள்ளிட்ட பழங்களை, விரைவில் பழுக்க வைப்பதற்காக, ரசாயனங்களை பயன்படுத்துவது, நுகர்வோருக்கு விஷம் வைப்பதற்கு சமம், அவ்வாறு செய்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கனிமொழி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால், நமது வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து பரிசீலனை செய்யுமாறு, அரசாங்கத்தை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு

பீஜிங்: சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பு,(WHO) சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

கோவையில் டெங்கு காய்ச்சலில் காதலி இறந்ததால் வேதனை அடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

5 லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.2 கோடி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

ஜாமியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

சந்தவாசல் அருகே, விவசாயியை திருமணம் செய்த பெண் என்ஜினீயர்

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? 4-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது

நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போலி அனுமதி சீட்டில் காளைகளை அழைத்து வந்து வாக்குவாதம் : போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தில் 12 அடி உயர தங்க கலசம் பிரதிஷ்டை

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’முதல் பாகம் ரிலீஸ்?

களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொலை 2 தீவிரவாதிகளை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை

தவறை உணர்ந்து முன்வந்தால் சிவசேனாவுடன் ஆட்சியமைக்க தயார்; பா.ஜனதா சொல்கிறது

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரசாயன கேன் வெடித்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் பலி

குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறையை தூண்டும் பேச்சு: உத்தரபிரதேச டாக்டர் மும்பையில் கைது

பரனூர் சுங்கச்சாவடியில் 6-ம் நாளாக கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

இந்திரா காந்தி மீது குற்றம்சாட்டிய தேசியவாத காங்கிரஸ் மந்திரி அவாத்; காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

எல்கர் பரிஷத் வழக்கை மும்பை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; புனே கோர்ட்டில் என்.ஐ.ஏ. மனு

73வது நினைவுநாளையொட்டி மெரினாவில் காந்தி படத்துக்கு கவர்னர், முதல்வர் மரியாதை : தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதிமொழி

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க எடியூரப்பா டெல்லி சென்றார்

பாரத் நெட் திட்டத்தை சட்டப்படி முறையாக செயல்படுத்த நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

கா்நாடகத்தில் நாளை முதல் அமல்; பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

தர்பார் படம் நஷ்டமா?: ரஜினியை நேரில் சந்தித்து முறையிடவுள்ள விநியோகஸ்தர்கள்!

அரசியலமைப்பை மாற்ற நினைக்கும் பா.ஜனதாவினரே தேசதுரோகிகள்; சித்தராமையா குற்றச்சாட்டு

மின்னாம்பள்ளி புதுவன்னியம்மன் கோயில் குடமுழுக்கு

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக் கூடாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்

லண்டன் :குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று துவங்கிய நிலையில், ஓட்டெடுப்பு மார்ச்சுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

திருப்பூர்:ஆடை தயாரிப்பு ஆர்டர்களை வசப்படுத்துவதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், அமெரிக்கா நோக்கி பயணத்தை துவக்கியுள்ளனர்.

புதுச்சேரி :அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி இளைஞர்கள் ஊர்வலம் - நாராயணசாமியிடம் மனு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.09 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.01 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages