அக்னிசப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*நாடு முழுவதும் நள்ளிரவு முதல் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
குளிர்சாதன வசதி இல்லாத, சாதாரண ரயில்களில் பயணிப்பதற்கான கட்டணம், கி.மீ.,க்கு, 1 பைசா அதிகரிக்கப்பட்டு உள்ளது. மெயில் மற்றும் விரைவு ரயில்களில், குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய வகுப்பில் பயணிப்பதற்கான கட்டணம், கி.மீ.,க்கு, 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியில் பயணிப்பதற்கான கட்டணம், கி.மீ.,க்கு, 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜதானி, துரோந்தோ உள்ளிட்ட பிரிமியம் ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.
*பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயாராகவே உள்ளது என்று ராணுவ தளபதி நரவனே தெரிவித்தார்.
*மறுவாக்குப்பதிவு தொடங்கியது:
கடலூர், தூத்துக்குடி, நாகை, தேனி, மதுரையில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டுகளை மாற்றிவழங்கிய காரணத்தால் 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு.
*கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.*
*நடராஜர் கோயிலில் 9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
*செங்கல்பட்டுமாவட்டம் திரூப்போரூா் பேரூராட்சியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதன நடைப்பெற்றதைத்தொடா்ந்து பொதுமக்கள் பக்தா்கள் நீண்டவாிசையில் நின்று மழையினும் பாராது வழிப்பட்டுசெல்கின்றனா்கள்
*ஜம்மு காஷ்மீர் : நவ்ஷேராவில் தீவிரவாதிகளுடனான மோதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்.
*முப்படைகளில் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிபின் ராவத் தெரிவித்தார்.
*ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் எஸ்.எம்.எஸ் சேவை வழங்கப்படுகிறது
*புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது; “ அற்புதமான 2020 ஆண்டாக இருக்கும்! அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் மலரட்டும். அனைவரும் உடல்நலம் பெற்று, அனைவரது ஆசைகளும் நிறைவேறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
*டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பம் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.19ம் தேதி கடைசி நாளாகும், குரூப்-1 முதல்நிலை தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி.
*ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும்.
*முப்படைகளிடம் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி சிறந்த நிர்வாகத்தை அளிப்பேன். அரசியல் சார்ந்து செயல்படாமல் மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே செயல்படுவேன்- முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்.
*அரசியல் சார்ந்து செயல்படுவதாக கூறப்படும் புகார் குறித்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் விளக்கம்.
*நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிப்பு.
*முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்பது ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தமாகும். போர் களத்தில் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள இந்த சீர்திருத்தம் உதவியாக இருக்கும் - பிரதமர் மோடி.
*சென்னை : பாரிமுனை அருகே மின்மாற்றியை பழுதுபார்த்தபோது, மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு.
No comments:
Post a Comment