அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*குமரி: இரணியலில் இரவு ரோந்து சென்ற காவலர்கள் ரெஜி, ஐயப்பதாஸ் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்:

போலீசாரை தாக்கிய அருண், சுனில்குமார், ரமேஷ், தினேஷ், அஜித் ஆகியோரை போலீஸ் தேடுகிறது.

*பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 450 சவரன் நகைகள் கொள்ளை:

பொன்னேரி அருகே மேட்டுப்பாளையத்தில் ஜானகிராமன் வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம். 450 சவரன் நகைகள், 20 லட்சம் ரொக்கம் கொள்ளை. தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடம் சென்ற போலீசார் தீவிர விசாரணை.

*”தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு” சுற்றறிக்கை.

*களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த சையது முகம்மது மற்றும் அப்பாஸ் ஆகியோரை பிடித்து கேரள காவல்துறை தீவிர விசாரணை.

*உச்சநீதிமன்றம் அதிரடி இணையதளத்தின் மூலம் கருத்துக்கள் தெரிவிப்பது அடிப்படை உரிமை - உச்சநீதிமன்றம்.

தனிநபர் சுதந்திரம், தனிநபர் பாதுகாப்பை காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை - உச்சநீதிமன்றம்.காஷ்மீரில் தகவல்தொடர்பு கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வாசிப்பு. ஜம்மு காஷ்மீரில் இணையதள முடக்கத்தை திரும்பப்பெறுவது பற்றி 7 நாளில் பரிசீலக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை. காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டு உள்ள 144 தடை உத்தரவுகள் அனைத்தையும் ஒரு வாரத்தில் மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணை.

*எஸ்.ஐ. வில்சன் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள், பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் பொருந்திப்போவதாக தகவல்.

அண்மையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

*முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையின் கீழ் 2 இணை செயலாளர்கள், 13 துணை செயலாளர்கள், 22 செயலாளர்கள் செயல்படுவார்கள் என அறிவிப்பு.

*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான குற்றவாளி ரவிச்சந்திரன் 15 நாட்கள் பரோல் விடுப்பில் சிறையிலிருந்து புறப்பட்டார்.
ஜனவரி. 10 முதல் 25ம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சாதாரண விடுப்பு வழங்கியிருந்தது.

*ஈரான் மீது ராணுவ தாக்குதல்; அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 224 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் போடப்பட்ட நிலையில் 13 பேர் தீர்மானத்தை புறக்கணித்துள்ளனர்.

*பெங்களூருவில் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.

ஜார்க்கண்டின் தன்பாத்தில் தலைமறைவாக இருந்த ருஷிகேஷ் தேவ்திகாரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.

*சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக்., பள்ளிகள் நாளை இயங்கும். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையால் 2ஆம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 4ஆம் தேதி திறக்கப்பட்டன அந்த விடுமுறையை இடுசெய்ய பள்ளிகள் நாளை இயங்கும். - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா.

*பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. வழக்கை ஜன.20ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

*2ஆம் வகுப்பு மாணவரை மனிதக்கழிவு அள்ள வைத்ததாக ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு.

*எஸ்.எஸ்.ஐ., வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி-முதல்வர்.

களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி- முதல்வர் பழனிசாமி.

*பெங்களூருவில் கைதான முகமது ஹனீப்கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.
பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை குற்றச்சாட்டு.

*உள்ளாட்சி தேர்தல் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், நாளை நடைபெறுகிறது.

தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் பதில். கூட்டுறவு சங்க தேர்தல் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*1028 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11,368 பதவிகளுக்கு பிப்ரவரி 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 27ம் தேதி தொடங்கி மனுக்கள் மீதான பரிசீலனை 28ம் தேதி நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages