அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*கன்னியாகுமரியில் எஸ்.ஐ. சுட்டு கொலை - டிஜிபி திரிபாதி விசாரணை:
*கன்னியாகுமரியில் களியக்காவிளையில் எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக; கேரள மாநிலம் சங்குமுகத்தில் டிஜிபி லோக்நாத் மெகரேவுடன் தமிழக டிஜிபி திரிபாதி ஆலோசனை.
சுட்டுக்கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் தொடர்பாகவும் திரிபாதி ஆலோசனை.
எஸ் ஐ வில்சனை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்படும் அப்துல் ஷமீம், பெங்களூருவில் பிடிபட்ட 3 பேருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்.
2014ல் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார் அப்துல் ஷமீம்.
*காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி மரியாதை. கன்னியாகுமரியில் களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. வில்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
*முதுகுளத்தூர் 8வது வார்டு ஒன்றிய திமுக ஆதரவு கவுன்சிலரை அதிமுகவினர் கடத்தியதாக வழக்கு தொடர்ந்த கவுன்சிலரின் மகன் ராஜாவுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
*கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சாத்தையா நீதிமன்றத்தில் ஆஜராகி தான் மகள், மருமகனுடன் இருப்பதாக வாக்குமூலம் அளித்ததால் வழக்கு தள்ளுபடி.
*தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்
*ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரைக் கைது செய்தது டெல்லி சிறப்பு காவல் படை.
*நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதியில்லை" : ஆளும் காங். எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டால் பரபரப்பு. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
*திருவள்ளுவர் மண்ணிலிருந்து கேட்கிறேன், திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது? வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் பணிகளை மத்திய அரசு செய்யும் என்பதை உறுதியாக கூறுகிறேன் - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
*மின்வாரியத்தில் 2,400 காலி பணியிடங்கள் அறிவிப்பு : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
மின்வாரியத்தில் 1300 கணக்கீட்டாளர் பணியிடங்கள, 500 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்கள், 400 மின்னியல் உதவி பொறியாளர், 125 இயந்திரவியல் உதவி பொறியாளர் மற்றும் 75 கட்டடவியல் உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதில், கணக்கீட்டாளர் பதவியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற காலிப் பணியிடங்களுக்கு இம்மாதம் 24-ம் தேதி விண்ணப்பக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்டவை குறித்து www.tangedco.gov.in என்ற இணையத்தில் தகவல் வெளியிடப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
*தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்த வசனம் இருப்பதாக புகார்.
குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குநர் முருகதாஸ் மீது வழக்கு-சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்.
*வட்டார கல்வி அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 21ம் தேதி வரை நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்.
போட்டித் தேர்வுகள் பிப்.15 ,16 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.
*புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்.
சென்னை நந்தனம் மைதானத்தில் 43-ஆவது சென்னை புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
*தஞ்சாவூரில் அதிமுக சார்பில் 15ம் வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வினுபாலனின் வெற்றியில் சந்தேகம் இருப்பதால் மறைமுக தேர்தலில் வாக்களிக்க இடைகால தடை - மாவட்ட முதன்மை நீதிமன்றம்.
*கடலூரில் தன் மீதும் குடும்பத்தினர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி அனந்தராமன்(27) என்பவர் முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்தின் முன்பு தீக்குளித்தார் - காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
No comments:
Post a Comment