திருவள்ளூர் அருகே பழம் மற்றும் பூக்களை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கோயம்பேட்டிலிருந்து பழங்கள் மற்றும் பூக்களை ஏற்றி கொண்டு தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வியாபாரிகள் 20க்கும் மேற்பட்டோர், சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். வாகனம் திருவள்ளூர் மாவட்டம் பெரவல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்புறமாக வந்த கார் வேகமாக மோதியதில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த பரந்தாமய்யா மற்றும் சேகர் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர் நரசிம்மலு, சித்திரா, மலர் உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கவரைப்பேட்டை காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment