அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சதம். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த 29-வது சதம் இது.
*கேரளா : சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக திருவனந்தபுரம் காங். பிரமுகர் ஷாகுல் நவாஸ் கைது.
*அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், அமெரிக்க செனட் சபையில் துவங்கியது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
*2 ஆண்டுகளுக்கு பிறகு களத்திற்கு திரும்பி, முதல் தொடரிலேயே பட்டம் வென்ற சானியா மிர்சா
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
*'முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருகிறார்' துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்வீட்.
முதல்வர் பழனிசாமி தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது.நெற்பயிருடன் முதல்வர் பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்வீட்.
*ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
டெல்டாவில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பது கண்டனத்திற்குரியது.
டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற மத்திய அரசின் புதிய உத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment