அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This
அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*ஜுன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் திட்டம் அமல் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்!
*ஐந்து மற்றும்  எட்டாம் வகுப்பு தேர்வு மையம் -  புதிய அறிவிப்பு:
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியிலேயே நடைபெறும்.
தொடக்கக்கல்வி துறை இயக்குனர் பழனிச்சாமி அறிவிப்பு.
மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றபட மாட்டார்கள். ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்த திடீர் முடிவு.
*காவல்துறைக்கு 3 மணி நேர ஷிப்ட்டு.
*புதுச்சேரியில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு 3 மணி நேர ஷிப்ட்டு முறையில் பணிகளை ஒதுக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு.
*பெயர்மாற்றம் செய்ய ஒப்புதல்.
மத்திய போலீஸ் கேண்டீனை 'கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர்' என்று பெயர்மாற்றம் செய்ய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.
*புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.
மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது.
மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு திட்டத்தை நிறைவேற்ற இயலாது- முதல்வர் நாராயணசாமி.
*மும்பை சித்தி விநாயகர் கோயிலுக்கு 35 கிலோ தங்கம் காணிக்கை!:
நாட்டிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக பிரபலமான அதே சமயம் ரொக்கம், நவரத்தினம், தங்கம், வெள்ளி என அதிக காணிக்கை பெறும் கோயில்களில் ஒன்றாக திகழ்வது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி வநாயகர் கோயில்.*
*கடந்த வாரம் சித்தி விநாயகர் கோயிலுக்கு தில்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.14 கோடி மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதன்மூலம் சன்னதியின் மேற்பகுதி, கதவுகள் உள்ளிட்டவற்றுக்கு தங்கக் கவசம் செய்யப்பட்டுள்ளது.
*துக்ளக் விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது -  நடிகர் ரஜினிகாந்த்.
நான் கேள்விப்பட்டதையும், பத்திரிக்கைகளில் வெளியானதையுமே கூறினேன். தனது பேச்சு மறுக்கப்பட வேண்டியதல்ல, மறக்கப்பட வேண்டியது. 1971-ல் நடந்த பேரணி குறித்து இல்லாத குற்றச்சாட்டு எதையும் நான் கூறவில்லை - ரஜினிகாந்த்.
*2017ல் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைதான் நான் பேசினேன்  - ரஜினிகாந்த்.
1971ல் நடந்த பெரியார் பேரணி குறித்து நான் கற்பனையாக பேசவில்லை. ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிந்தது உண்மைதான். ராமர், சீதை உருவங்கள் உடை இல்லாமல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது பத்திரிக்கையில் வெளிவந்தது. இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல மறக்க வேண்டிய சம்பவம் - நடிகர் ரஜினிகாந்த்.
*"பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட  முடிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும்".
2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு - பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்-பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்.
நிறைய வெளிநாடு தொடர்புகள் இருப்பதாக மனுதாரர் தரப்பு வாதம் - சிபிஐ வழக்கறிஞர்.
வெளிநாடு தொடர்பு குறித்த விசாரிக்க நிறைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - சிபிஐ வழக்கறிஞர்.
*அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம். அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல். இனி மார்ச் மாதம் தான் நீட் பயிற்சி வகுப்புகள் நடக்கும் என தகவல்.
* நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் -
பாஜக எச் ராஜா டிவிட்டர் செய்தி:
திரு. ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகை செய்தியின் நகலைக் காட்டியதற்கு திக வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள்.
*ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு:
356 முதுகலை வேதியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக தற்கால பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வரும் 24ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்: - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ரஜினி அரசியல்வாதி அல்ல; அவர் ஒரு நடிகர்; பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் வேண்டுகோள். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
*தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம்.
*தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும் என உயர்நீதிமன்றக் கிளையில் அறநிலையத்துறை தகவல்.
*சிஏஏ சட்டம் பற்றி ராகுல், மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா?
போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது. -உள்துறை அமைச்சர் அமித்ஷா
*பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு.
*பழைய நிகழ்வுகளை பற்றி பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிகாந்திற்கு பி.ஹெச்.டி பட்டமா கொடுக்கப் போகிறார்கள்.
*அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குறியது- அமைச்சர் ஜெயக்குமார்.
*வில்சன் கொலை வழக்கு - தவ்பீக், சமீம் ஆகியோருக்கு 10 நாள் போலீஸ் காவல்.
கன்னியாகுமரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு. 28 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் உத்தரவு.
*இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகல்.
*நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
*சங் பரிவார் அமைப்புகளின் தூண்டுதலுக்கு ரஜினி இரையாகிவிடக்கூடாது.
*பெரியார் வாழ்க என்று ரஜினி சொல்லும் காலம் வரும்.
*பெரியார் பெயரைச்சொல்லித்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்பதை ரஜினி உணர்வார்-திருமாவளவன்.
*முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி கட்டப்பட்ட பங்களாவை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
விதிமீறி கட்டப்பட்ட 5 சொகுசு பங்களாக்களுக்கான மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும் உத்தரவு - விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
*தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவிற்கான அரசாணையை நடைமுறைப்படுத்த ஏப்ரல் 24ம் தேதி வரை அவகாசம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
*எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு.
திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்ஜிஆர்.
தற்போது ஏதேதோ தலைப்புகளில்  திரைப்படங்கள் வருகின்றன, ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை- முதல்வர் பழனிசாமி.
*அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள்.
ஒரு பழனிசாமி அல்ல; ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் - முதல்வர் பழனிசாமி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages