நெடுஞ்சாலை விபத்துகளை தடுப்பதில்
ரோந்துக்காவல் படையினரின் பங்கு குறித்து! - மருத்துவர் இராமதாசு அய்யா கருத்து.
சாலைவிபத்துகள் தடுப்பு வாரம் இன்று முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சாலை விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இன்று (20.01.2020) காலை வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கியிருந்தேன்.
நெடுஞ்சாலை விபத்துகளை தடுப்பதில் நெடுஞ்சாலை ரோந்துக்காவல் படையினரின் பங்கு குறித்தே இந்தப் பதிவு
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் ரோந்துக்காவல் படையினர் பணியில் இருப்பதை காண முடியும். கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் இருந்து வாகனங்களில் பயணிப்பவர்களை பாதுகாப்பதும், சட்டவிரோத செயல்களை நடப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடத்துவதும் தான் இவர்களின் பணியாகும்.
இவற்றைக் கடந்து சாலை விபத்துகளைக் கடக்கும் கடமையும் இவர்களுக்கு உண்டு. அதனால் சாலைகளில் அபாயகரமான வேகத்தில் பயணிக்கும் வாகனங்களை பிடித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சாலைகளில் அதிக புகையை கக்கிக் கொண்டு செல்லும் வாகனங்கள் மீதும் இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை விபத்தை தடுக்க பெருமளவில் உதவும்.
No comments:
Post a Comment