அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

*ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும்.

*விமான கொள்முதலில் 10 ஆண்டு தாமதத்தால் ரஃபேலுக்கு பதில் மிக்-21இல் அபிநந்தன் பறக்க நேரிட்டது- விமானப்படை முன்னாள் தளபதி தனோவா.

*நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது!

*ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் பலியான பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு!

கடந்த 1 மாதத்தில் மட்டும்
ராஜஸ்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 263 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்!

*பாஜகவின் தமிழக தலைவர் நியமனம் குறித்து சென்னை பாஜக தலைமையகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம். பாஜகவின் மேலிட பிரதிநிதிகள் சிவபிரகாஷ், நரசிம்மராவ் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவராக, ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு என்பவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.

1986 முதல் 2006 வரை பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜக துணைத் தலைவராகவும் பின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தவர் குப்புராமு.

*உள்ளாட்சி தேர்தலில் தமாகா கோரிய சின்னம் கிடைக்காததால் அதிக இடங்களை கைப்பற்ற முடியவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற்று கூட்டணிக்கு வலுசேர்ப்போம் - ஜி.கே.வாசன்.

*பாகிஸ்தானில் குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம். குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சோனியா காந்தி.

*குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான கால அட்டவணையை ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் டிஎன்பிஎஸ்சி வெளியிடும். அதன்படி 2020ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

*திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை தொடர்பாக முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்.

*பெங்களூரு சிறையில் இருந்த முருகனை திருச்சி தனிப்படை போலீசார் அழைத்துவந்து மத்திய சிறையில் அடைத்தனர்; நாளை மறுநாள் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

*திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

6 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மேலும் 3 கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு.

*ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்கு கிருஷ்ணகிரி மண்டலத்தில் அனுமதியில்லை.
பிகில் பட ரிலீஸ் நேரத்தில் வன்முறை ஏற்பட்டதால் எந்த நடிகரின் படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்படாது- காவல்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages