📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 சனவரி - 06 திங்கள் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சீலம் - நல்லொழுக்கம்
➖➖➖➖➖➖➖➖➖➖
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம், இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது.
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல்; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அமித்ஷா உத்தரவு
முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கருப்பசாமிபாண்டியன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்
முள் படுக்கையில் தவம்.. குறி சொல்லி அசத்தல்.. பரபரக்கும் பெண் சாமியார்.. சிவகங்கையில் சலசலப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கோவையில் பாக்ஸிங் பயிற்சியாளர் கைது
தனித்து போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்போம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிறார் ஆபாச வீடியோ.. பேஸ்புக்கில் பதிவு செய்த அஸ்ஸாம் மாநில இளைஞர் பொள்ளாச்சியில் கைது
கருப்பு பணம் பதுக்க வெளிநாட்டு தீவுகளில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகள் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளன. இதில் சென்னையைச் சேர்ந்த நிறுவனமும் இடம் பெற்று உள்ளது.
போர்க்களமான ஜேஎன்யூ வளாகம்.. விரைந்த ஆம்புலன்ஸ்கள்.. போலீஸ் குவிப்பு.. கெஜ்ரிவால் அதிர்ச்சி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.1 லட்சம் மின்சார கட்டணம் செலுத்தியவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது.
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ!
லிபியாவில் பயங்கரம் ராணுவ பள்ளி மீது வான்தாக்குதல் : 30 மாணவர்கள் உடல் சிதறி பலி
நடுத்தெருவில்.. நைட்டியுடன் பற்றி எரிந்து.. கருகிய லீமா ரோஸ்.. சூளைமேட்டில் பயங்கரம்!
புர்கினோ பாசோவில் கண்ணிவெடியில் பஸ் சிக்கி 14 பேர் பலி
தொடர் போராட்டம் எதிரொலி: ஹாங்காங் சீன தூதர் நீக்கம்
கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ - வரலாறு காணாத பாதிப்பை சந்திக்கும் ஆஸ்திரேலியா
நைஜீரியாவில் கியாஸ் நிலையத்தில் வெடிவிபத்து; 5 பேர் பலி
மாநகராட்சி 15வது மண்டலத்தில் வீடுகளுக்கு சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் சிறையில் அடைப்பு: உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
தீவுத்திடல் பொருட்காட்சிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க தரமான பிரசாதம் தயார் செய்ய வேண்டும்: கோயில் அலுவலர்களுக்கு இணை ஆணையர் அறிவுரை
மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு
திருவண்ணாமலை கோயிலில் உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு கொடியேற்றம்
உடன்குடி அருகே மயக்க நிலையில் மீட்பு: வீட்டில் அடைத்து வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம் - சூடு வைத்து சித்ரவதை செய்த காதலன் உள்பட 2 பேர் கைது
கொல்லம் அருகே வீடு இல்லாதவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கிய தமிழக தொழிலதிபர்: தன்னை வாழ வைத்தவர்களுக்கு செய்த கைமாறு
சங்கரன்கோவில் அருகே, தாய்-மகள் உள்பட 3 பெண்கள் குளத்தில் மூழ்கி பலி - துணி துவைக்க சென்றபோது பரிதாபம்
டெல்லி ஜேஎன்யூ பல்கலை வளாகத்தில் மீண்டும் கலவரம்: மாணவர் தலைவர் மண்டை உடைப்பு
இந்தியா-இலங்கை மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்து
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 625 டன் புதிய ரூபாய் நோட்டை விமானப்படை எடுத்து சென்றது: முன்னாள் தளபதி தகவல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 251 ரன்னில் ஆல்-அவுட்
வரும் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக 1 லட்டு: தேவஸ்தானம் அறிவிப்பு
கர்நாடகாவில் திரையிட ரஜினிகாந்த் படத்துக்கு எதிர்ப்பு
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் வைஜெயந்திமாலா பாய் என்பவரின் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்திமாலா பாய் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கதைகளை திருடி படம் எடுப்பதா? டைரக்டர் பாக்யராஜ் கண்டனம்
வீட்டு மனைகள் விற்பனையில் மோசடியை தடுக்க, பத்திர பதிவுக்கு முன், நில அளவை உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற, புதிய கட்டுப்பாடு விரைவில் அமலுக்கு வர உள்ளது.தடை விதிப்புதமிழகத்தில் வீடுகள், மனைகள் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அஜித்பவார்- நிதி, அசோக் சவான்- பொதுப்பணி, ஆதித்ய தாக்கரே- சுற்றுச்சூழல் மராட்டிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு
இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடான, 'ஜிம் - 2' முதலீட்டு நிலை மற்றும், தொழில் துவங்க ஒற்றைச்சாளர முறையில் அனுமதி அளிக்கும் நிலை குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., வரும், 13ம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக, தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முஸ்லிம்களின் வீடுகளுக்கு சென்று விளக்கம் அளித்த நிதின் கட்காரி
லோக்சபா தேர்தல் முடிந்ததும், தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் வகித்த மாநில தலைவர் பதவி காலியாக உள்ளது.இந்தப் பதவிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்த, கருத்து கேட்பு கூட்டம், தமிழக பா.ஜ., தலைமையகமான, சென்னை, கமலாலயத்தில் நேற்று நடந்தது.
புனேயில் மாயமான தொழில் அதிபர் சுட்டுக் கொலை - உடலை மீட்டு போலீசார் விசாரணை
சென்னை : குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
35 ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து ரூ.4 கோடி அபேஸ் செய்த ஊழியர் கைது - தானேயில் சிக்கினார்
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநகரின் பெயரை மாற்றினால் போராட்டம் - முதல்-மந்திரிக்கு, குமாரசாமி எச்சரிக்கை
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு வழக்கில் டில்லி போலீசார் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில் 'கடந்த ஐந்து ஆண்டுகளில் டில்லியில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் 1,294 பேர் தற்கொலை செய்துள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது - எடியூரப்பா பேச்சு
ராஞ்சி : ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
காங்கிரசில் எந்த பதவிக்கும் போட்டி போடவில்லை - டி.கே.சிவக்குமார் சொல்கிறார்
டெஹ்ரான் : அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, மேற்காசிய நாடான ஈரானின் முக்கிய படைத் தளபதி குவாசிம் சுலைமானி உடல், ஈரானின் அஹ்வாஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டது.
கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் பெங்களூருவில் ஓவிய சந்தை - எடியூரப்பா தொடங்கி வைத்தார்
கடலுார் மாவட்டத்தில், ஊராட்சி துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற வார்டு உறுப்பினர்களிடம் பேரம் நடந்து வருகிறது. இதனால், அவர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் உயிர் பிழைத்தார் - பல்லாரி அருகே இன்ப அதிர்ச்சி
கிண்டி:கிண்டியில், அலங்கோலமாக இருந்த மயானம், மறுசுழற்சி கழிவுகளால் அழகுப்படுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி, குப்பையை பிரித்து கையாளுவதில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இயற்கை உரம், எரிவாயு, மின்சாரம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
மாநில தேர்தல் ஆணையர் நியமனம் செல்லாது என்று கவர்னர் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
கோவை:மழையை பதிவு செய்வதற்கு, ரூ.2.50 கோடியில் குறு வட்டத்துக்கு ஒரு மழைமானி வீதம் நிறுவும் அரசின் திட்டம் அறிவித்து, ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் செயல்பாட்டுக்கு வராமலேயே உள்ளது.மழையளவை பதிவு செய்வதற்கு, மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் மழைமானிகள் நிறுவப்பட்டுள்ளன.
குயில்தோப்பு விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு: மகளிர் ஆணைய தலைவியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்
குடியுரிமை திருத்த சட்டம் : உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்துகிறது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
திருபுவனையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களிடம் போதை ஆசாமிகள் தொந்தரவு - ரோந்து பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட நடவடிக்கை
பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை : 'நீட் தேர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நடுப்பகல் நாடகம் ஒன்றை, முதல்வர் இ.பி.எஸ்., அரங்கேற்றி இருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.64 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.58 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment