வன்னியர் என்றால் சாதி வெறியர்களா??? தமிழ்நாடு மற்றும் இந்திய நாட்டிற்கு போராடிய வன்னியர்கள் வரலாற்றில் மறைத்தது ஏன்??? சிறிது நேரம் எடுத்துக்கொண்டு படியுங்கள். - Agnipuratchi

வன்னியர் என்றால் சாதி வெறியர்களா??? தமிழ்நாடு மற்றும் இந்திய நாட்டிற்கு போராடிய வன்னியர்கள் வரலாற்றில் மறைத்தது ஏன்??? சிறிது நேரம் எடுத்துக்கொண்டு படியுங்கள்.

Share This

வன்னியர் என்றால் சாதி வெறியர்களா??? தமிழ்நாடு மற்றும் இந்திய நாட்டிற்கு போராடிய வன்னியர்கள் வரலாற்றில் மறைத்தது ஏன்??? சிறிது நேரம் எடுத்துக்கொண்டு படியுங்கள். கட்சி வேறுபாடின்றி அனைத்து வன்னியர்களுக்கும் அனுப்புங்கள்....

தமிழ் இனமே வன்னியர் சமூகத்திற்கு நீங்கள் எல்லோரும் செய்த துரோகத்திற்கு எப்பொழுது பிராயச்சித்தம் தேடப்போகிறீர்கள் ??

தமிழ் நாட்டில் எல்லா சாதியின் வரலாற்றையும் அங்கீகரித்து, சிலையாகவும், தபால் தலையாகவும், பாடமாகவும் ஆவணப்படுத்தி, அழகு படுத்தி, பெருமை படுத்தி அந்த சமூகங்களின் வரலாற்று பங்களிப்பை அங்கீகரித்த நீங்கள் அனைவரும், என்றாவது தமிழகத்தின் பெரிய சாதியான வன்னியர் சமூகத்திற்கென்று ஒரு வரலாறு உண்டு, அவர்களும் இந்த நாட்டிற்காக போராடி பல தியாகங்களை செய்தவர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கிறதா?

காமராஜர் படத்தை பெருமையாக போட்டுக்கொள்ளும் எந்த ஒரு நாடாரும் அவரை முதல்வராக்கிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரை மறந்தும் பேசியதில்லை, தமிழ் தேசியம் பேசும் கனவான்கள் மறந்தும் மறை மலை அடிகளின் குரு சைவதிரு சண்டமாருதம் சோம சுந்தர நாயகர் பற்றி பேசியதில்லை, விவேகானந்தரையே வாதத்தில் வென்று சைவம் உயர்ந்தது என்று இம்மண்ணில் சமயத்தை காத்த அந்த பெருமகனைப் பற்றி யாருக்கும் ஏன் தெரியவில்லை?

தமிழகத்தில் பாரதி என்ற பட்டம் பெற்றவர்கள் இருவர்; ஒருவர் பார்ப்பனர் சுப்ரமணியம், மற்றொருவர் வன்னியர் சோம சுந்தர நாயகர், ஒரு போட்டியில் இருவரும் ஒருசேரப் பெற்ற பட்டம் தான் இந்த பாரதி, ஆனால் பாரதி என்றால் உங்களுக்கு சுப்பிரமணியம் தான் நியாபாகத்திற்கு வரும், கவிதை என்றால் சுப்ரமணிய பாரதி தான் ஞாபத்திற்கு வரும், தனித்தமிழ் இயக்கம் நடத்தி தமிழ்த் தொண்டாற்றிய சோமசுந்தர பாரதி ஞாபகத்திற்கு வரமாட்டார், அதே சுப்ரமணிய பாரதிக்கு நிகராக திருவிக அவர்களால் போற்றப்பட்ட கவிதைகளை எழுதிய கவிச்சிங்கம், வெள்ளையன் தடையை மீறி பாரதியின் மறைவிற்கு இரங்கேற்பா பாடிய வீரர், அந்த பாரதி பெயரில் வீரபாரதி என்று பத்திரிகை நடத்தி இந்நாட்டு மக்களுக்கு தன் உணர்ச்சி மிகுந்த கவிதையின் மூலம் சுதந்திர தாகத்தை ஊட்டி பின்னால் வெள்ளையன் அந்த பத்திரிகையையும் தடை செய்து வர்மாவின் வளத்தை குலைத்தனர், அனால் உங்களுக்கு சுதேசி மித்திரன் தான் தெரியும், ஆனால் ராஜாஜியால் ராஜ ரிஷி என்று அழைக்கப்பட்ட அர்த்தநாரீச வர்மாவின் வீரபாரதி பற்றி ஒன்றும் தெரியாது.

தமிழகத்தின் முதல் பகுத்தறிவுவாதி அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் பற்றி அறிந்தவர் எத்தனைபேர்? பறையர் ரெட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் பற்றி தெரிந்த உங்களுக்கு அவர்களுக்கும் முன்பே the thinker என்று அங்கிலாத்திலும், தத்துவ விவேசினி என்று தமிழிலும் பகுத்தறிவு இதழ் நடத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களின் நில உரிமைக்கு போராடிய இந்த தமிழ் பெரியாரை தெரியாயது, ஆனால் கன்னட ராமசாமி பெரியாரை நல்லா தெரியும்.

விவேகானந்தரையே வாதத்தில் தோற்கடித்த சண்டமாருதம் சூலை சோமசுந்தர நாயகரை தெரியாது, ஆனால் இவரிடம் தமிழ்க் கற்ற சிஷ்யன் மறைமலை அடிகளைத் தெரியும், சண்டமாருதம் சூலை சோமசுந்தர நாயகர் பெயரில் ஒரு துண்டுச்சீட்டு கூட இல்லை ஆனால் மறைமலை அடிகள் பெயரில் எத்தனை எத்தனை தெருக்கள், எத்தனை எத்தனை கட்டிடங்கள், எத்தனை எத்தனை சிலைகள்?

காந்தியால் சர்தார் என பட்டம் கொடுக்கப்பட்ட ஆதிகேசவ நாயகர் சென்னை சென்ட்ரல் பகுதியில் இருந்த தன்னுடைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் கொள்கைக்காக வரி கொடாமல் 7 ஆண்டுகள் சிறைப்பட்டு தன்னுடைய அத்தனை நிலத்தையும் இழந்து இந்நாட்டிற்காக தியாகம் செய்தார், அவருக்கு சென்னையில் ஒரே ஒரு சிலை உண்டா?

வேலூர் சிப்பாய் புரட்சியை ஒடுக்கிய நீல் துரையின் சிலையை நிறுவ வெள்ளைக்கார அரசாங்கம் முயற்சித்த பொழுது பெண்களை ஒன்று திரட்டி அச்சிலை எதிர்ப்பு போராட்டம் செய்து நிறை மாத கர்ப்பிணியாய் சிறையில் வதை பட்டு, பல முறை கெஞ்சியும் பரோல் கிடைக்காமல் சிறையிலேயே பிள்ளையை பெற்றெடுத்த அந்த பெருந்தாய் அவளின் மகனுக்கும் ஜெயில் வீரன் என்று பெயர் வைத்து அந்த சிசுவாயும் சுதந்திரப் போராட்டத்தில் ஐக்கியமாக்கினால், இதனால் காந்தியால் தென்னகத்து ஜான்சி ராணி என்று அழைக்கப்பார் இந்த இந்த வீர மங்கை, இவர் தான் தமிழ் நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், ஆனால் உங்கள் வாய் மேலவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்து லட்சுமி ரெட்டியை தான் கொண்டாடும். பாடமாக படிக்கும்.

இதே போன்றதொரு வீரமங்கை தான் தென்னகைது பாண்டிய குல மங்கை வீரம்மாள் அரசியார், இந்தியாவில் முதன் முதலில் ஜான்சி ராணி, வேலு நாச்சியாருக்கும் முன்பு வெள்ளையனை எதிர்த்து போர் செய்து வேற்றி பெற்ற வீர மங்கை, ஆனால் உங்கள் சாதி வெறி வேலு நாசிச்சியார் தவிர வேறு யாரையும் ஆராதிக்காது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் சத்தியாகிரக தியாகி சாமி நாகப்ப படையாட்சி தன் 19 வயதில் காந்தியம் பூண்டு உண்ணாவிரத போராட்டத்தில் எச்சில் கூட விழுங்காமல் இறந்துபோனார், ஆனால் இவருக்கு பின்னால் வந்த தில்லையடி வள்ளியம்மை என்ற முதலியார் சாதி பெண்மணி மட்டுமே தென்னாப்பிரிக்காவில் போராடினார் என்று பாடமாக படிப்பீர்கள், சிலை வைத்து கொண்டாடுவார்கள்.

எங்கள் மண்ணில் எங்கள் முன்னோர்களுக்கு சிலை இல்லை ஆனால் உங்கள் முன்னோர்களுக்கு மூளைக்கு மூளை சிலைகள் ஏன் என்று சுக்கு நூறாக உடைக்காமல் மாலை போட்டு அழகு பார்க்கிறோம் பார் அதனால் தான் நீங்கள் எல்லாம் எங்களை சாதி வெறியர் என்கிறீர்கள்.

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, என உங்கள் பகுதியில் எந்த வன்னிய முதலாளியைக் கொண்டு அல்லது எந்த வன்னிய அரசியல் வாதியைக் கொண்டு உங்கள் பகுதி , உங்கள் சாதி உரிமைகளை நங்கள் சாதி அரசியல் செய்து பரிடத்தோம்? எங்கள் பகுதியில் எங்கள் மக்களை நுகர்வுப் பண்டமாக பயன்படுத்தி, சுரண்டி கொழுக்கும் உங்களை அடித்து விரட்டி அல்லது ஐந்து லட்சம், பத்து லட்சம் கேட்டு மிரட்டி அரசியல் செய்தோமா?

எங்களால் எந்த சாதியின் சமூக நீதிக்கு பங்கம் வந்தது? உங்கள் ஊரில் உங்கள் சாதிக்காரனை தவிர வேரொருவனுக்கு வீடு கூட வாடைக்கு தராத நீங்கள், உங்கள் தொழிலில் வாச்மேன் வேலையை கூட உங்கள் சாதிக்காரனை தவிர வேறொரு சாதிக்கு வீட்டுக் கொடுக்காத நீங்கள்,  இவை அனைத்தையும் வீட்டுக் கொடுத்து வாழ்கிற எங்களைப் பார்த்து சாதி வெறியர் என்றும் நாங்கள் ஆதரிக்கும் கட்சியை பார்த்து சாதிக் கட்சி என்றும் சொல்லலாமா? இது நியாயமா?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages