அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
2020 ஆம் ஆண்டு முதல் சட்டபேரவை கூட்டத்தில் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கியது. இந்த உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம். நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது என- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் கூறினார்.
*புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை.
*சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரேநாளில் சவரனுக்கு ரூபாய் 512 உயர்வு. ஒரு கிராம் தங்கத்தின் விலை 3896 ரூபாய். சவரன் ரூ.31168-க்கு விற்பனை.
*ஒன்றிய, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.
*13 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவுகளை மதியம் 12.30-க்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
10க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு.
*சுசீந்திரம் மார்கழி தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 9-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
*திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெற இருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து.
சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்ஏல்ஏக்கள் ஆலோசனை நடத்திய நிலையில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
*பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் தாமதம்.
சரியாக படிக்காத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதை தடுக்க முயற்சி என தகவல். முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவு.
*”வாக்கு எண்ணிக்கை குறித்தான சிசிடிவி பதிவுகளை இன்று 12.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்"-மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி. வாக்கு எண்ணிக்கை முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் சி.சி.டி.வி. காட்சிகளை சமர்ப்பிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?" -மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
*டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் மூலம் பணியிழந்த 491 பேருக்கு வாணிப கழகத்தில் இளநிலை உதவியாளர் பணி - முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார்.
*திரௌபதி படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என சென்னை காவல் ஆணையரிடம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார்.
*ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் -மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு. ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
*மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தப்பியோட்டம்.
சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியியல் பட்டதாரி அரவிந்த் பதவியேற்றவுடன், சுவர் ஏறி குதித்து ஓட்டம்.
*திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூரில் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை விடைப்பெறும் - வானிலை மையம்.
*பதவி ஏற்க எதிர்ப்பு ஊரே திரண்டு போராட்டம்.
கடலூர்: உள்ளாட்சித் தேர்தலில் பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக விஜயலட்சுமி பதவியேற்க ஊரே திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது, 4 மணி நேரத்திற்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
*நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் முடிகிறது.
விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31-ஆம் தேதிவரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும்.
*டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு.
டெல்லியில் 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன" டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும்.
ஜனவரி 22-ம் தேதியன்று வேட்புமனு பரிசீலனை
ஜனவரி 24-ம் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள்
பிப்ரவரி 8-ம் தேதியன்று டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்
பிப்ரவரி 11-ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை
ஜனவரி 14-ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம். ஜனவரி 21-ல் வேட்புமனு தாக்கல் நிறைவு"- தலைமை தேர்தல் ஆணையர்
No comments:
Post a Comment