அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*புதுச்சேரி பாஜக.தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு:
புதுச்சேரி: பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த நிலையில் மீண்டும் தேர்வாகியுள்ளார் சாமிநாதன்.
*சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - கைதான இருவரிடம் தக்கலை காவல்நிலையத்தில் விசாரணை.
இருவரையும் தக்கலை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தது போலீஸ். உடுப்பியில் நேற்று முன்தினம் அப்துல் சமீம், தவுபீக் கைது.
*கனிமொழி, ராசா தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, 2ஜி மேல்முறையீட்டு வழக்கை ஜனவரி. 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
*என் மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பதவி விலகுகிறேன்- இல்லையெனில் கிரண்பேடி தனது பொதுவாழ்கையை விட்டு விலக தயாரா?-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சவால்.
*மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
*தனவேலு தற்காலிக நீக்கம்.
புதுவை: முதல்வருக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்- மாநில தலைவர் நமச்சிவாயம் அறிவிப்பு.
*பிசிசிஐ வெளியிட்டுள்ள 2020-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் நீக்கம்.
பிசிசிஐ 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது தோனி விரைவில் ஓய்வு பெற உள்ளார் என கூறப்படும் நிலையில் பிசிசிஐ அவரது பெயரை நீக்கியுள்ளது
*நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு.
விசா கோரி ரஜினியிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை - இலங்கை அரசு.
*மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு. மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவித்த நிலையில் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிப்பு.
No comments:
Post a Comment