அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

*நெல்லை : முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது - வரும் 27ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை.

*தீவிரவாதி காஜாமைதீனுக்கு சிம்கார்டு கொடுத்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்.

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிம்கார்டு வழங்கிய வழக்கு கியூ பிரிவு போலீஸ் விசாரணையில் இருந்து  என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

*வரும் ஜனவரி 26 முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் காலை நேரத்தில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசிப்பது கட்டாயமாக்கப்படுகிறது : மகாராஷ்டிர அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்.

*பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும், கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில், தங்களை பின்தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

*மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் சரண்.

ஆதித்யா ராவ் என்பவர் பெங்களூருவில் போலீசாரிடம் சரண் அடைந்தார். நேற்று முன் தினம் மங்களூரு விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

*அணுசக்தி மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்துவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் இருந்து வடகொரியா வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை அமெரிக்கா தவறியதால் வெளியேறுவதாக வடகொரியா அறிவிப்பு.

*திருவள்ளூர் : பொன்னேரி வேலம்மாள் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை.

*எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை.

தவுபிக், சமீம் ஆகிய இருவரை 10 நாள் காவலில் எடுத்துள்ள நிலையில் காவல்துறை நடவடிக்கை.

களியக்காவிளை சோதனைசாவடியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

*குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள்.

இவ்வளவு மனுக்கள் ஏன் என்ற காரணத்தை அறிய முடியவில்லை - உச்சநீதிமன்றம்.

மனுக்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமான உத்தரவு பிறப்பிக்க போவதில்லை - தலைமை நீதிபதி.

144 மனுக்களில் 60 மனுக்கள் மட்டுமே அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு வழக்கறிஞர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் - மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல்.

*5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை.

*5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.

*குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு.

மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரகால அவகாசம் அளித்து உத்தரவு.

*சிஏஏவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு.

*உள்ளாட்சி மறைமுக தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் ஜனவரி 30 -ம் தேதி மறைமுக தேர்தல்.

*விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோடியாக ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டம்.

இதற்காக வயோம் மித்ரா என்ற ஹுயுமனாய்டு வகை ரோபோவை தயாரித்த‌து இஸ்ரோ.
வரும் டிசம்பர் மாதம் வயோம் மித்ராவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்.

*காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு.

நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பாதுகாப்பு வீரரும் காவல்துறை சிறப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

*ஜனவரி 21-ம் தேதி நிலவரப்படி, 43 விமானங்களில் வந்த 9156 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை நடத்திய பரிசோதனையில் யாரிலும் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ப்ரீத்தி சுதன்.

*பெண்களுக்கு முதிர்வுதொகை வழங்கும் திட்டம் :  2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ரூ.50ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 24ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்க சமூகநலத்துறை ஏற்பாடு.

*”ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும்”-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

சரோஜாவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

*நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என கண்டிறிந்து கைது செய்ய புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது -குஜராத் போலீஸ்.

நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது, இன்டர்போல்-குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.

தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய, புளு கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

*பெரியார் பேரணி குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages