அக்னிசப்புரட்சியின் தேர்தல் செய்திகள் - Agnipuratchi

அக்னிசப்புரட்சியின் தேர்தல் செய்திகள்

Share This

அக்னிசப்புரட்சியின் தேர்தல் செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம். 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை  நடக்கிறது.

முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள் பதிவானது.

இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவு.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.

*சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாம‌தம்:

*அதிகாரிகள் குளறுபடியால் ஆரணி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதம்.

*செய்யாறு தபால் வாக்கு பெட்டியின் சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாம‌தம்.

*தூத்துக்குடி : மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சியம்மாள் என்பவர் மாரடைப்பால் மரணம்.

*புதுக்கோட்டை, ராமநாதபுரத்தின் கமுதி, திருவள்ளூரில் வாக்கு எண்ணிக்கை இதுவரை தொடங்கப்படவில்லை.

*புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் பணி ஒதுக்கீட்டில் குழப்பம்; ராமநாதபுரம் கமுதி ஒன்றியத்தில் வாக்குச்சீட்டுகளை பிரித்தெடுக்கும் பணியில் தாமதம்.

*வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது?!

வாக்கு பதிவு பெட்டியில் உள்ள வாக்குச் சீட்டுகள் முழுமையாக கொட்டப்படும்.
4 வண்ணங்களில் உள்ள வாக்குச் சீட்டுகள் தனிதனியாக பிரிக்கப்படும்.

வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் ஐம்பது ஐம்பதாக கட்டுகள் (Bundle)  அமைக்கப்படும் அதன்பிறகு வாக்காளர் பட்டியல், வாக்கு பதிவு செய்தோர் பட்டியல் சரிபார்க்கப்படும்

அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அதற்கான RO கடிதம் அளிப்பார் அதன்பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடி..!

இராஜபாளையத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது..

வாக்கு சீட்டை பிரிக்கும் இடங்களில் காட்சி பதிவு செய்ய செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு..

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages