அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

*அமெரிக்க படைகள் ஈரான் மீதான தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 3.5% அதிகரிப்பு.

*மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.

*தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், நாகர்கோவில் - கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தம்.கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்.

*ஈராக்: பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள விமான தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்.

அல் அசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் தாக்கியது.

*ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

*ஈராக்கின் அல்-ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க விமானப்படைகள் முகாம் மற்றும் அதன் கூட்டணி படைகள் மீது ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த ராணுவ தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’, என பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால்,  மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

*ஈரானில் இருந்து 180 பயணிகளுடன் உக்ரைன் நாட்டுக்கு சென்ற விமானம் விழுந்து விபத்து ஆனதாக தகவால் வெளியாகி உள்ளது

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்,  180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியது.  

*ஈரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், போயிங் 737 ரகத்தை சேர்ந்தது.  தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 

*தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 25 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

*மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை, சவரனுக்கு 528 உயர்ந்து 31432-க்கு விற்பனை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1552 உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை.

*பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

*மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை, சவரனுக்கு 528 உயர்ந்து 31432-க்கு விற்பனை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1552 உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை.

*பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு. அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

*ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரம் - 4 ஆண்டுகளுக்கு போட்டியில் பங்கேற்க தடை:

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில்,  4 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க பளுதூக்கு வீராங்கனை சர்ப்ஜீத்துக்கு தடை.

*பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கும். ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு தூதரக உதவிகள் உடனடியாக செய்யப்படும்  - மத்திய அரசு.

ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் - மத்திய அரசு.

ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.- மத்திய அரசு.

*போர் பதற்றம் காரணமாக ஈரான், ஈராக் வான் பகுதியில் பயணிக்க  வேண்டாம்.

சிங்கப்பூர் விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை.

சீனா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை.

பெர்ஷியா மற்றும் ஓமன் வளைகுடா பகுதி வான்வெளியை பயன்படுத்தவும் தடை.

* தமிழக பேரவையில் இன்று:

மீன் அதிகம் சாப்பிட்டால்  மாரடைப்பு, புற்றுநோய்,  கன்பார்வை கோளாறு  உள்ளிட்ட எந்த பிரச்சனையும் வராது. இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும்’- அமைச்சர் ஜெயக்குமார்.

ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் நம் முதல்வர்!" - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம், சிக்ஸர் அடிக்கலாம்; ஆனால் ஒன்பது ரன் அடிப்பவர் நம் முதல்வர் மட்டுமே;  ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் பெற்றது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் விஜய பாஸ்கர் பேச்சு.

தமிழகத்தில் மேலும் 4  மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்".

கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைக்க திட்டம். சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

*பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  ஒப்புதல்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக் நடைபெறும் நிலையில் ஒப்புதல் தரப்பட்டது.

*”கடத்தப்பட்ட முதுகுளத்தூர் 8வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்"

தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., நேரில் ஆஜராக வேண்டும்" -உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.
கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages