கோல்கட்டா: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். - Agnipuratchi

கோல்கட்டா: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Share This
 கோல்கட்டா: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோல்கட்டாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மோடி, ஹவுராவில் உள்ள பெலுர் மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பேசினார். அப்போது அவர், துடிப்புமிக்க 100 இந்தியர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என கூறிய சுவாமி விவேகானந்தரை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மாற்றத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஆற்றலும் நமக்குள் இருக்க வேண்டும்.குடியுரிமை சட்டம், குடியுரிமை தருவதற்கே; பறிப்பதற்கு அல்ல என்பதை நான் மீண்டும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
சுதந்திரத்திற்கு பிறகு மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரிய தலைவர்கள், பாக்.,ல் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் என நம்பினார்கள். அதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் சிலர் அரசியல் விளையாட்டிற்காக அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இளைஞர்களும், மக்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

குடியுரிமை சட்டம் குறித்து புரிந்து கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. சிஏஏ விவகாரத்தில் பாக்.,ன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. சிஏஏ சிறுபான்மையினரை பாதுகாக்கக் கூடியது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages