அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*காஷ்மீர் - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை - போலீசார் ஒருவர் காயம்.

*கரூர் : திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மற்றும் சகோதரர் வீடு உட்பட 3 இடங்களில் அதிகாரிகள் சோதனை.
பழைய வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை என தகவல்.

*கேரளா: கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள மாணவி திருச்சூர் அரசு மருத்துவமனையிலிருந்து, அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம்.

* பிஎஸ்என்எல் ஊழியர்கள் ‌78000க்கும் மேற்பட்டோர் இன்று ஒரேநாளில் விருப்ப ஓய்வு. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைகிறது.

*உ.பி.யில் 20 சிறுவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து கொலைக் குற்றவாளி சுட்டுக் கொலை.

வீட்டில் பார்ட்டிக்கு வரவழைத்துவிட்டு 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்த குற்றவாளி. 20 குழந்தைகளையும் பூட்டி வைத்துக் கொண்டு கொலை குற்றவாளி மிரட்டல்.
நள்ளிரவு குற்றவாளியை சுட்டுக் கொன்றுவிட்டு குழந்தைகளை மீட்டனர்.

*காஷ்மீர் - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை - போலீசார் ஒருவர் காயம்.

*கரூர் : திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மற்றும் சகோதரர் வீடு உட்பட 3 இடங்களில் அதிகாரிகள் சோதனை.
பழைய வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை என தகவல்.

*கேரளா: கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள மாணவி திருச்சூர் அரசு மருத்துவமனையிலிருந்து, அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம்.

*பிஎஸ்என்எல் ஊழியர்கள் ‌78000க்கும் மேற்பட்டோர் இன்று ஒரேநாளில் விருப்ப ஓய்வு. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைகிறது.

*புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை:

காரில் சென்ற போது  கிருமாம்பாக்கம் அரசுப்பள்ளி அருகே நடந்த சம்பவம். பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம் மீது வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் தப்பியோடிய போது அரிவாளால் வெட்டினர்.

*"சீனாவில் இருந்து சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்படும் இந்தியர்கள் டெல்லியில் 14 நாட்கள் மருத்துவ பரிசோதனையில் வைக்கப்படுவர்"- மத்திய சுகாதாரத்துறை.

*இந்திய பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை- பிரதமர் மோடி.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் பொருளாதாரம் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் பொருளாதார பிரச்சனைகளை நோக்கியதாகவே இருக்கும்.- பிரதமர் மோடி.

*”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்”.

திருக்குறளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.

*குரூப் 4 தேர்வு முறைகேடு பற்றி சிபிஐ விசாரிக்கக்கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ்.

*பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி 2021-ம் ஆண்டில் 6% - 6.5% ஆக இருக்கும் என கணிப்பு 2020-ல் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% ஆக இருக்கும் என கணிப்பு. - மத்திய அமைச்சர்.

*குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி-யில் வலுக்கும் சந்தேகம். ராமேஸ்வரம் மையத்தில் இருந்து மட்டும் 42 பேர் தேர்வு பெற்றது தொடர்பாக விசாரணை நடத்த திட்டம். விசாரணை நடத்தும்படி 42 பேர்  பட்டியலுடன் சிபிசிஐடி போலீசில் டிஎன்பிஎஸ்சி புகார்.
குரூப் 1 தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

*"சீனாவில் இருந்து சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்படும் இந்தியர்கள் டெல்லியில் 14 நாட்கள் மருத்துவ பரிசோதனையில் வைக்கப்படுவர்"- மத்திய சுகாதாரத்துறை.

*ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக, சென்னை வந்த சிட்டாள் (40) என்ற பெண்ணுக்கு உடல்நலக் குறைவு.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமா? என்ற சந்தேகத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதி.

*திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.
அதிமுக அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டதாக இன்று காவல்துறை அவரது வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

*பாலிடெக்னிக் முறைகேடு - வாழ்நாள் தடை?:

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: 196 பேருக்கு வாழ்நாள் தடை?’

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 196 பேருக்கு வாழ்நாள் தடைவிதிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

*நிர்பயா வழக்கு - தூக்கு தண்டனை ஒத்திவைப்பு:

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை. நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் அதிரடி உத்தரவு. டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்கூர் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை.

*தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார், தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க பேட்டி.

*குரூப் 4 தேர்வு முறைகேடு: மேலும் 2 பேர் கைது:

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் கல்யாணசுந்தரம் ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி.

*யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் ரூ .1கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 2 பேருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் மற்றும் 4 ஆண்டு கடுங்காவல் - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

*புதுச்சேரி அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலுவுக்கு வழங்கப்பட்ட வாரியத்தலைவர் பதவி பறிப்பு.

முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறியதால்  ஏற்கனவே சஸ்பென்டு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த "பாப்ஸ்கோ" வாரிய தலைவர் பதவியும் பறிப்பு.

*புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை:

காரில் சென்ற போது  கிருமாம்பாக்கம் அரசுப்பள்ளி அருகே நடந்த சம்பவம்.
பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம் மீது வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் தப்பியோடிய போது அரிவாளால் வெட்டினர்.

*குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி-யில் வலுக்கும் சந்தேகம்.

ராமேஸ்வரம் மையத்தில் இருந்து மட்டும் 42 பேர் தேர்வு பெற்றது தொடர்பாக விசாரணை நடத்த திட்டம். விசாரணை நடத்தும்படி 42 பேர்  பட்டியலுடன் சிபிசிஐடி போலீசில் டிஎன்பிஎஸ்சி புகார். குரூப் 1 தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

*சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு - மக்கள் அச்சம்:

சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள். சீனாவில் இருக்கும் 400 இந்தியர்களை அழைத்து வர புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்.

நாளை மதியம் சீனாவில் இருந்து இந்தியா வருவார்கள் என தகவல். உஹானில் இருந்து இந்தியர்களுடன் நாளை பிற்பகல் 2 மணிக்கு விமானம் திரும்பும். ஏர் இந்தியா தலைமை நிர்வாக இயக்குநர் அஸ்வானி லோகானி தகவல்.

*ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக, சென்னை வந்த சிட்டாள் (40) என்ற பெண்ணுக்கு உடல்நலக் குறைவு.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமா? என்ற சந்தேகத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதி.

*திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.

அதிமுக அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டதாக இன்று காவல்துறை அவரது வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

*பாலிடெக்னிக் முறைகேடு - வாழ்நாள் தடை?:

’பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: 196 பேருக்கு வாழ்நாள் தடை?’ 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 196 பேருக்கு வாழ்நாள் தடைவிதிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.

*நிர்பயா வழக்கு - தூக்கு தண்டனை ஒத்திவைப்பு:

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை. நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் அதிரடி உத்தரவு. டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்கூர் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை.

*தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார், தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க பேட்டி.

*குரூப் 4 தேர்வு முறைகேடு: மேலும் 2 பேர் கைது:

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் கல்யாணசுந்தரம் ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி.

*யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் ரூ .1கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 2 பேருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் மற்றும் 4 ஆண்டு கடுங்காவல் - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

*புதுச்சேரி அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலுவுக்கு வழங்கப்பட்ட வாரியத்தலைவர் பதவி பறிப்பு.

முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறியதால்  ஏற்கனவே சஸ்பென்டு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த "பாப்ஸ்கோ" வாரிய தலைவர் பதவியும் பறிப்பு.சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு - மக்கள் அச்சம்:

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages