📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 பிப்ரவரி - 09 ஞாயிறு 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சுய(நலம்) - தன்(னலம்)
➖➖➖➖➖➖➖➖➖➖
சுவீடன் நாட்டு உயரம் தாண்டுதல் வீரர் புதிய உலக சாதனை
புதுடில்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, 2020 ஜன.,15 அல்லது அதற்கு பிறகு சீனா சென்று வந்த வெளிநாட்டினருக்கு இந்தியாவிற்குள் வர அனுமதி கிடையாது என இந்திய விமான போக்குவரத்துறை இயக்குனர்கள் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் ராணுவ வீரர் திடீர் துப்பாக்கி சூடு; பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
கராச்சி: பூப்பெய்துவிட்டதால், 14 வயது கிறிஸ்துவ சிறுமிக்கு நடந்த கட்டாய திருமணம், ஷரியத் சட்டப்படி செல்லும் என, பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு
ரூ.715 கோடி செலுத்த அனில் அம்பானிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
தமிழக காவல் துறைக்கு ரூ.84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகேடு: 14 போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
'இரண்டரை மணி நேரத்திற்கு பட்ஜெட் உரையைப் படித்து, போரடித்து விட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்' என, அனைவரும் சொன்னாலும், ஒரு பெரிய விஷயத்தை அமைதியாக சாதித்துள்ளார் அவர். பட்ஜெட் உரையில், காஷ்மீரின் மிகச் சிறந்த கவிஞர் தீன நாத் கவுலின் கவிதையைப் படித்தார்.
ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது டெல்லி சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை
தேர்தலில், அரசியல் கட்சிகளுக்கு பிரசார உத்திகளை சொல்லித்தருவது, சமூக வலைதளங்களில் எப்படி பிரசாரம் செய்வது என்பது போன்ற வேலைகளை செய்ய, தனியார் நிறுவனங்கள் உள்ளன. சமீபத்தில், தி.மு.க., இப்படி ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
அமெரிக்காவில் 2 மூத்த அதிகாரிகள் நீக்கம் பதவி நீக்க விசாரணையில் டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் நடவடிக்கை
இஸ்லாமாபாத்: குழந்தைகளிடம் பாலியல் குற்றம்புரிவோரை பொது இடத்தில் தூக்கிலிடும் தீர்மானம், பாகிஸ்தானில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி தேர்தலில் 111 வயதிலும் வந்து வாக்குப்பதிவு செய்த மூதாட்டி
விஜய், சூர்யா நடித்த ‛பிரெண்ட்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது மீண்டும் சீமானை வசைப்பாடி உள்ளார்.
நிம்மதியான தூக்கமின்றி மக்கள் தவிப்பு: சென்னையில் கொசுத்தொல்லை அதிகரிப்பு பகல் வேளையிலும் பாய்ந்து, பாய்ந்து கடிக்கிறது
புதுடில்லி : 'கொரோனா' வைரஸ் பாதிப்பு அச்சத்தில், ஆசிய நாடான ஜப்பானுக்கு அருகே, கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில், பரிதவிப்பதாகவும், உடனடியாக காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படியும், 160 இந்திய ஊழியர்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே பயங்கரம்: தாய், தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளி மது வாங்க பணம் தராததால் ஆத்திரம்
கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 90 சதவீதம் சரிவு
டில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தேடுதலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு ரூ.42,500 அபராதம் - ஒடிசா போலீசார் அதிரடி
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு: நடிகர் விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு
காவலர் தேர்விலும் முறைகேடு புகார்: 1000 பேர் போலீ சான்றிதழ் கொடுத்ததாக குற்றச்சாட்டு
பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸின் கேள்விக்கு பதிலளித்துள்ள நடுவணரசு, புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற முடியாது என தெரிவித்துள்ளது.
மாநிலங்களின் நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும்; பொதுமக்களின் பங்கு வேண்டும் என்பதால் எல்.ஐ.சி. பங்கு விற்பனை...நிர்மலா சீதாராமன் பேட்டி
தலைவாசலில், சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க அரசுகளுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
பாமகவின் லட்சியங்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வண்ணம் கட்சியினர் செயல்பட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் பிரதமர் உரையில் இருந்து ஒரு வார்த்தை நீக்கம்: வெங்கையா நாயுடு நடவடிக்கை
ஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம்படி தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 398 கோடி ரூபாய் மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பவானிசாகர் அணை நீர்வரத்து குறைந்தது
கோரிக்கை மனு கொடுக்க சென்ற வினியோகஸ்தர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதா? டி.ராஜேந்தர் கண்டனம்
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் ஒருவருக்கு சிகிச்சை
தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
செங்கல்பட்டு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோயம்பேடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
2 வருட தடைகளை கடந்து படப்பிடிப்பு சிம்புவின் ‘மாநாடு’ 19-ந் தேதி தொடக்கம்
கட்சி மேலிடத்தின் கெடுபிடியால் எடியூரப்பா, சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறார் சித்தராமையா குற்றச்சாட்டு
மராட்டியத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இலவச மின்சாரம் மாநில அரசு திட்டம்
பெலகாவி அருகே கோர விபத்து மேம்பாலத்தில் இருந்து கீழே டிராக்டர் விழுந்தது தொழிலாளர்கள் 6 பேர் சாவு 17 பேர் படுகாயம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர் ஷோபா எம்.பி. பேட்டி
புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தல் கருத்துகணிப்புக்கள் சரியானது அல்ல எனவும், தாங்கள் 48 இடங்கள் வரை கைப்பற்றுவோம் என பா.ஜ.,வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புதுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.04காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.89காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment