அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
அரசு, புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை மீட்க தனி பிரிவை ஏன் துவங்கக் கூடாது? 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*குருப்-1 தேர்விலும் முறைகேடு என தகவல்.
எஸ்பி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மீது சிபிசிஐடி ஐஜிக்கு பரபரப்பு கடிதம்.
2003 குரூப்-1 தேர்வு மற்றும் 2007 குரூப்-1 தேர்வு ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக புகார். 2004 முதல் இதுவரை 7 தேர்வுகளில் முறைகேடு என அதிர்ச்சி தகவல்.
*விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜக போராட்டம் நடத்தியதால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்பட துறையில் பெரிய அளவில் பிரச்னை வரவிருப்பதாக தெரிகிறது.
தொழிலாளர்களிடம் பிரச்னை செய்வதை ஃபெப்சி அமைப்பு கண்டிக்கிறது- ஆர்.கே.செல்வமணி.
*சென்னை துறைமுகத்தில் உள்ள சீன கப்பல்களில் இருந்து பொருட்களை எடுப்பதற்கான வழிமுறை விரைவில் காணப்படும்.
கடன் தர மறுக்கும் வங்கிகள் பற்றி சிறு, குறு தொழிலாளர்கள் மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம். - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
*தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
வயது முதிர்வு காரணமாக கீழே குனிய முடியாததால், சிறுவனை உதவிக்கு அழைத்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே கூறியுள்ளார்; வருத்தமும் தெரிவித்துவிட்டார், இதை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது - முதல்வர் பழனிசாமி.
*தொடரை வென்றது நியூசிலாந்து.
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
*பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை.
எந்த மாநிலத்திற்கும் தனியாக என்று நிலுவைத் தொகை வைக்கவில்லை.
விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
*நகை வியாபாரியிடம் கொள்ளை.
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியிடம் 900 கிராம் தங்க நகை மற்றும் ரூ. 64,000 பணம் கொள்ளை.
*நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு முன் திரண்ட விஜய் ரசிகர்கள்.
நடிகர் விஜயை காண திரண்ட ரசிகர்களை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
*காவல்துறைக்கு டேப், சிசிடிவி போன்றவை வாங்கியதில் முறைகேடு செய்ததாக 14 அதிகாரிகள் மீது வழக்கு.
காவல்துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் 14 பேர், 2 தனியார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு.
*17 பேர் சுட்டுக்கொலை:
தாய்லாந்து நாட்டில் கொராட் என்ற பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு. கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரம். ஷாப்பிங் சென்டருக்குள் புகுந்த ஜக்ராஃபாந்த் தோம்மா என்ற அந்த ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.
*பெல்ஜியத்தை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்:
FIH Pro ஹாக்கி லீக்கில் நடப்பு உலக சாம்பியனான பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி! ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்ட பெல்ஜியத்தை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்.
புள்ளிப்பட்டியல்:
பெல்ஜியம் - 11
இந்தியா - 8
நெதர்லாந்து - 7
ஆஸ்திரேலியா - 6
ஜெர்மனி - 5
ஸ்பெயின் - 4
பிரட்டன் - 2
நியூசிலாந்து - 2
அர்ஜெண்டினா - 0
*ரூ.397.60 கோடி மதிப்பிலான 50,266 வழக்குகளில் தீர்வு:
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் ரூ.397.60 கோடி மதிப்பிலான 50,266 வழக்குகளில் தீர்வு.
மாநிலம் முழுவதும் 521 அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2.43 லட்சம் வழக்குகளில் 50,266 வழக்குகளுக்கு தீர்வு.
*தமிழகம் முழுவதும் 10,024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
*குரூப் 2 மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை
ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை - டிஎன்பிஎஸ்சி.
No comments:
Post a Comment