📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 பிப்ரவரி - 13 வியாழன் 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 பிப்ரவரி - 13 வியாழன் 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 பிப்ரவரி - 13 வியாழன் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சுவாசம் - மூச்சு
➖➖➖➖➖➖➖➖➖➖

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது.

புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில், தலா, ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் அமைப்பின் உதவியை நாடியது சிபிசிஐடி

உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதல்; 12 பேர் பலி

ஆக்ரா: ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வேயில், தனியார் பஸ்சும் - டிரக்கும் மோதி கொண்டதில் 16 பேர் உயிரிழந்தனர்.20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது

கோவை : ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளி விடுதிகளை, கல்லுாரி விடுதிகளாக மாற்ற, அரசுக்கு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.

திருப்பூர் நகர நில மறு அளவை பணி நிறைவு பெற்று, 58 ஆயிரம் பேருக்கு 9(2) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நர்சை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

புதுடில்லி: டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, 'நிர்பயா' 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார், பவன் குப்தா, வினய், அக் ஷய் ஆகியோருக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், அரசு பள்ளிகளில் இலவச காலை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் பாமகவின் பொது நிழல் நிதி அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தநிலையில், அப்படி என்றால் மாநில காங்கிரசை கலைத்துவிடலாமா? என பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி எழுப்பி உள்ளார்.

புனே: ''வங்கி வாசமே அறியாத ஏராளமானோருக்கு கணக்கு துவக்கி அவர்களை அமைப்பு சார்ந்த நிதி துறையில் இணைத்த வங்கிகளின் செயல்பாடு பாராட்டுக்குரியது'' என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: ‘உடனடி உதவி இல்லையேல் 113 விலங்கினங்கள் அழிந்துவிடும்’ - ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பார்சிலோனா: 'கொரோனா' வைரஸ் பீதியால் உலக மொபைல் போன் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 10 நாட்களாக பரிதவிக்கும் பயணிகள்: கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு

திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம், 20ம் தேதி முதல் தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது.
கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள், ஒரு லட்டு, 50 ரூபாய் விலையில், லட்டு கவுண்டரில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். கல்யாண உற்சவ லட்டு மற்றும் வடை பரிந்துரை கடிதங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.

வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு: ‘இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’ - டிரம்ப் உற்சாகம்

ராமநாதபுரம்: மூன்று ஆண்டுகளில், நான்கு பேருடன் குடும்பம் நடத்திய பெண்ணிற்கு பிறந்த, குழந்தையின் தந்தை யார் என்ற கேள்விக்கு, நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது

சென்னை: தமிழக அரசின் 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் ரூ.31½ லட்சம் வெளிநாட்டு பணம், செல்போன்களும் சிக்கின

புதுடில்லி: டில்லி சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் மீது கொலை முயற்சி பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு தீவிரமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

திருப்பூரில் அதிகாலை பரபரப்பு சம்பவம்: இந்து முன்னணி நிர்வாகியின் கார் தீ வைத்து எரிப்பு - மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

கோவை: ''தனிப்பட்ட முறையில், நடிகர் விஜயுடன் எந்த பகையும் இல்லை,'' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தர்மபுரி அருகே அரசு பள்ளியில் எலி மருந்து கலந்த எள் உருண்டைகளை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி

கோவையில் பஸ் சக்கரத்துக்குள் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி: பதை, பதைக்கச்செய்யும் வீடியோ காட்சி வைரலாக பரவுகிறது

அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணியில் விரிசல் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

கிணத்துக்கடவு அருகே பயங்கரம்: முறைதவறிய காதலால் வாலிபர் குத்திக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது

கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் பாஜகவுக்கு குழப்பம்: சிவசேனா

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், பும்ரா

மகாராஷ்டிராவில் கல்லூரிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: அரசு அறிவிப்பு

100 அரசுப் பள்ளி மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா

பிப். 24, 25ம் தேதி அமெரிக்க அதிபர் இந்தியா வருகை: ‘ஹவுடி மோடி’ போன்று டிரம்புக்கு ‘கெம் சோ’...களைகட்டும் குஜராத்தின் அகமதாபாத் நகரம்

மராட்டியத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை மராத்தி பாடம் கட்டாயம் சட்டசபையில் மசோதா தாக்கல்

கேரள சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் போலீசாரின் 25 கைத்துப்பாக்கிகள் 12,601 தோட்டாக்கள் மாயம்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வழங்க கோரி கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு வாடகை கார்-ஆட்டோக்கள் ஓடாது

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட கைதி தப்பி ஓட்டம்

முழுஅடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூருவில் பரபரப்பு டி.கே.சிவக்குமாருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு

விழுப்புரம் அருகே அடுத்தடுத்தது 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

பெங்களூரு மாநகராட்சியில் கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவி ஆனார், மமதா வாசுதேவ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு

நாடு முழுவதும் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் 50% இடங்கள் காலி..: AICTE தலைவர் பேட்டி

டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி: காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க துல்லிய நடவடிக்கை தேவை வீரப்பமொய்லி பேட்டி

காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது கானல் நீராகிவிடுமோ?: வைகோ

காரைக்கால்-பாகூர் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு

காஞ்சிபுரம் அருகே 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

கருவடிக்குப்பத்தில் ரூ.18½ கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு

மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.45 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages