அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*ஈரோடு விஜயமங்கலத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் பலியான விவகாரம்.
கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
பணிக்கு வராத மருத்துவரிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க அரசுக்கு உத்தரவு.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்குவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல்.
*சீமான் மீது வழக்குப்பதிவு.
2018ஆம் ஆண்டு அக்.10ல் கிண்டி காமராஜர் நினைவு மண்டபத்தில் பேட்டி அளித்த போது அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும் சீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
*தமிழகத்தில் வெட்டுக்கிளி பாதிப்பு இருக்காது- வேளாண் துறை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி.
பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -ககன்தீப் சிங்.
*திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட 6 மாத ஆண் குழந்தை லித்தேஷ் உயிரிழப்பு. ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
*திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட காலதாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதியை முடிவு செய்யவில்லை. - மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல்.
*தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம், வரும் 17ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு.
*குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரிடமிருந்து 2 கார்கள் மற்றும் பல லட்சம் ரொக்கம் பறிமுதல்.
*நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்.
*தலைவி திரைப்படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை விதிக்கக்கோரி ஜெயலலிதாவின் உறவினர் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
இயக்குனர் விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
*தேர்தல் எப்போது நடத்த முடியும் என்பது குறித்து 3 வாரத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு 3 வாரத்திற்கு ஒத்திவைப்பு.
*முறைகேடுகளை தவிர்க்க டி.ஆர்.பி தேர்வில் 24 புதிய விதிமுறைகள் அமல்-ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி.
வாக்காளர் அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் எடுத்து வர உத்தரவு-டி.ஆர்.பி.
*காலணியை கழற்ற சொன்ன விவகாரம் - பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்:
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற சொன்ன விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் பதிலளிக்க பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்.
*தொழிலதிபர்களின் வாராக்கடன்கள் குறித்து தொலைக்காட்சி, நாளேடுகளில் வெளியிட கோரியும், மாணவர்களின் கல்வி கடன் ரூ.55 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யக்கோரியும் வழக்கு:
வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
*பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு.
மாநில தகவல் ஆணையத்தில் கல்வித்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜர். 2000 முதல் 2019 வரை 164 சம்பவங்கள் நடந்துள்ளதாக காவல்துறை சார்பில் ஆவணங்கள் சமர்பிப்பு.
*அணைகள் புனரமைப்பு திட்டம் 2ன், கீழ் மத்திய அரசுக் குழுவினர் மேட்டூர் அணையை புனரமைக்க ஆய்வு:
தமிழகத்தில் 36 அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மேட்டூரில் இன்று ஆய்வு.
*டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது. மருத்துவ துறை, பதிவு துறையை சேர்ந்த இரு பெண் அதிகாரிகள், இடைத்தரகர் கைது - சிபிசிஐடி.
*பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை.
இந்த ஆண்டு முதல் அமல் - ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பு. இயற்பியல் , கணிதம், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் படிந்திருந்தால் போதும்.
*நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கு.
தற்போது உத்தரவு பிறப்பித்தால் அது மேலும் சட்டசிக்கலை உருவாக்கும் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். மத்திய அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
*டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தனிநபர் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் ஸ்டாலின் தீர்மானம்.
*டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி.
முறைகேடுகள் குறித்து புள்ளி விவரங்களுடன் புதிய மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
*கடந்த 3 ஆண்டுகளில் 2000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளன - திமுக தலைவர் ஸ்டாலின்.
படிப்படியாக மதுவிலக்கு என்ற வாக்குறுதி என்ன ஆனது? சொல்வது ஒன்று செய்வது வேறு என அதிமுகவின் இரட்டை வேடம் இது - ஸ்டாலின்.
*அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு விசாரணையின் நோக்கம், வரம்பு குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
*டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் - காவலர் முத்துக்குமார், சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் ஆனந்தன் ஆகியோருக்கு ஜாமீன் மறுப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
*கன்னியாகுமரி கோழிப்போர்விளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை - கணக்கில் வராத ரூ.86,000 பறிமுதல் ஊழியர்களிடம் விசாரணை.
No comments:
Post a Comment