📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 பிப்ரவரி - 18 செவ்வாய் 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 பிப்ரவரி - 18 செவ்வாய் 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 பிப்ரவரி - 18 செவ்வாய் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சு(ஜு)வாலை - தீக்கொழுந்து
➖➖➖➖➖➖➖➖➖➖

தனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

டாமன்: ''கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது .

புதுடில்லி: அசாமில் உள்ள உள்நாட்டு மக்களை கண்டறிய, 1951ம் ஆண்டை, கடைசி வருடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசின் குழு பரிந்துரைத்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜயவாடா: சாய்பாபா கோவில் பணிகளுக்காக, பிச்சைக்காரர் ஒருவர் சுமார், 8 லட்சம் ரூபாயை பிச்சைஎடுத்து வழங்கி அனைவரைக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு

லண்டன்: ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சில், 'டென்னிஸ்' புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. வலுவடைந்து வரும் அந்தப் புயலால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சட்டசபையில் நேற்று விளக்கம் அளித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்ற பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

புதுடில்லி: சிஏஏ.,வுக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக, 154 முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புதுடில்லி: 'உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள, 396 பணியிடங்களில், 199 பதவிக்கு இதுவரை பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மண்டலம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை? - துரைமுருகனுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீருக்கென, ராணுவத்தில் தனியாக ஒரு படைப் பிரிவு உருவாக்கப்படும்,'' என, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.

ஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்

இஸ்லாமாபாத்: ''இந்தியாவின் சில கொள்கை முடிவுகளை, சர்வதேச சமூகம் கவனிக்க தவறினால், அகதிகள் பிரச்னையை, பாகிஸ்தான் மீண்டும் சந்திக்க நேரிடும்,'' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 1,770 ஆனது: சீன நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய பரிசீலனை

புதுடில்லி: சபரிமலை வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தின் மீண்டும் துவங்கியதுசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒன்பது நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தது.மேலும் பல்வேறு மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

சிரியாவில் கார் குண்டு வெடித்து 6 பேர் பலி

புதுடில்லி: இந்திய விமானப்படைக்கு, 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், புதிய போர் விமானங்களை தயாரித்து வழங்க, எச்.ஏ.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரெயிலில் சிவபெருமானுக்கு இருக்கை ஒதுக்கீடு வெற்றிகரமாக ஓட படத்துக்கு பூஜை

லூதியானா நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை

ராணுவ உயர் பதவி அளிக்க மறுப்பதா? பெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இந்தியா

கம்பம் அருகே பயங்கரம்: தலை துண்டித்து என்ஜினீயர் படுகொலை

டிரம்பின் இந்திய வருகை ஏற்பாடுகள் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா

தொட்டில் கட்டி விளையாடிய போது கழுத்தில் சேலை இறுகி மாணவர் சாவு - நாகர்கோவிலில் பரிதாபம்

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு

வாசுதேவநல்லூர் அருகே ஆம்னி பஸ் மோதி 3 பேர் பலி: டயர் வெடித்து பழுதான காரின் அருகே நின்றபோது பரிதாபம்

மகாத்மா காந்தியின் விருப்பம்: நாடு முழுவதும் மதுவிலக்கு...மதுபானம் இல்லாத இந்தியா’ குறித்த மாநாட்டில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு

நெல்லையில் செல்போன் கடைக்காரர் வீட்டை உடைத்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

4 டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

விளையாட்டு உலகின் உயரிய விருது வழங்கி சச்சினுக்கு கவுரவம்

2020-21ம் ஆண்டுக்கான 43 ஐ.பி.எஸ். ஆதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை

இன்ஸ்டராகிராமில் 5 கோடி ஃபாலோயர்ஸ் கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி

மும்பையில் 10 மாடிகளை கொண்ட ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பயங்கர தீ 3,500 ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றம்

பண்ருட்டி அருகே டிக்டாக் மோகத்தால் திசைமாறிய மனைவியை அடித்து கொன்ற கணவன்: பகீர் வாக்குமூலம்

டிரம்பின் இந்திய வருகை ஏற்பாடுகள் அடிமை மனநிலையை காட்டுகிறது சிவசேனா சாடல்

சேலம் - கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் ஓடும் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சிவ்னேரி கோட்டை மண்ணின் ஆசீர்வாதத்தால் நான் முதல்-மந்திரி ஆனேன் உத்தவ் தாக்கரே பேச்சு

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு

சிவசேனா கூட்டணி அரசை கண்டித்து பா.ஜனதா 400 இடங்களில் போராட்டம் 25-ந் தேதி நடக்கிறது

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: வைகோ

கம்பளா போட்டியில் சாதனை படைத்த வீரர் சீனிவாச கவுடாவுக்கு ரூ.3 லட்சம் பரிசு முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் பாராட்டு

சென்னை ஆவடி அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 பேர் உயிரிழப்பு

ஹாசன், விஜயாப்புரா, கார்வாரில் புதிய விமான நிலையம் கவர்னர் உரையில் அறிவிப்பு

ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தானமாக பெற்ற இருதயத்தை 24 மணி நேரம் வரை 'துடிப்பாக' வைத்திருக்கும் கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2015 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை கோரி திமுக மனு தாக்கல் செய்ய அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல்: துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, எம்.எல்.சி.யாக தேர்வு ஓட்டுப்பதிவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

திருப்பூர்;புதுமையான ஆயத்த ஆடை ரகங்களுடன் திருப்பூரில் ஐ.கே.எப்., கண்காட்சி, நேற்று துவங்கியது; ஆடைகளை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்த, வெளிநாட்டு வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சி துறை இயக்குனர் தலைமையில் நடந்தது

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயலாக்கத்தில், மத்திய அரசு வெளியிட்ட மதிப்பெண் அடிப்படையிலான, 'ரேங்க்' பட்டியலில், 23வது இடத்துக்கு, கோவை மாநகராட்சி தள்ளப்பட்டதால், அதிகாரிகள், 'அப்செட்' ஆகியுள்ளனர்.

வீராம்பட்டினம் கடற்கரையில் சிமெண்டால் ஆன பாய்மர கப்பல் கட்டுமானப் பணி தீவிரம்

புதுடில்லி: சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், காஷ்மீரில் சட்டசபை தொகுதிகள் வரையறை செய்யும் பணியை மத்திய அரசு துவக்கியது.

போலீசாரின் ரோந்துப்பணி காரணமாக பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார்கள் கவர்னர் கிரண்பெடி பெருமிதம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.68 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.27 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages