அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*டெல்லி என்கவுன்டர் - இருவர் சுட்டுக்கொலை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. பிரகலாதபூர் பகுதியில் அதிகாலை என்கவுன்ட்டர் நடைபெற்றதாக டெல்லி காவல்துறை தகவல்.
*டிஎன்பிஎஸ்சி முறைகேடு- மேஜிக் பேனாவை தயாரித்தவர் கைது.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
*சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு வடிவமாக சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தடுக்க உத்தரவிட கோரி முறையீடு அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது - நீதிபதி சத்யநாராயணன்.
தலைமை நீதிபதி அமர்வு முன் மீண்டும் முறையீடு. "மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு பட்டியலிடப்படும்".
*14 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? - திமுகவினரிடம் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி.
*வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு:
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ்.
*நாங்கள் மத்திய அரசுடன் எதிரும், புதிருமாக இருந்தோம், உங்களைப்போல் இணக்கமாக இல்லை - சட்டப்பேரவையில் முதலமைச்சரின் கேள்விக்கு துரைமுருகன் பதில்.
*நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி:
உயர்நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக்கூடாது என தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி. 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
*குரூப் 2 தேர்வு - 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன்:
குரூப் 2 தேர்வு முறைகேடு - 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன். கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தில், 2011-ல் நடைபெற்ற தேர்வில் முறைகேடு என தகவல். பல்வேறு பதவிகளில் இருக்கும் 12 பேரும் ஒரே கிராமத்தில் இருந்து தேர்ச்சி பெற்றதாக தகவல். 12 பேரும், 19-ஆம் தேதி கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன்.
*டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு. தன்னாட்சி பெற்ற அமைப்பான டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை. - முதல்வர் பழனிசாமி.
*தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு:
மதுரை: ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டை சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றி நடத்த முடியுமா என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
*இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு. விசாரணைக்கு தடை கோரிய தினகரனின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்.30ம் தேதிக்கு ஒத்திவைப்பு - டெல்லி உயர் நீதிமன்றம்.
*திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்.
தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவு. பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4ஆம் தேதிகளில் ஆஜராக உத்தரவு.
*நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா?: - தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.
பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் தரப்பு கூறியதை அடுத்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
*என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
- மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.
No comments:
Post a Comment