தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். - Agnipuratchi

தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

Share This

தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

*உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு.

*2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு.

*திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.

*கல்வித்துறைக்கு ரூ.31,181 கோடி.

*தமிழக அரசின் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி.

*11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவ ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.

*சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் - பட்ஜெட்டில் அறிவிப்பு.

*இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

நிர்பயா திட்டம் -ரூ.71 கோடி
உணவு மானியம் - ரூ.6,500 கோடி
பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி
உயர்கல்வித்துறை -ரூ.5,052,84 கோடி
மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி
மருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி
சுகாதாரத்துறை - ரூ.15,863 கோடி
தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி
தொல்லியல் துறை - ரூ.31.93 கோடி
போக்குவரத்து துறை- ரூ.2716..26
பேரிடர் மேலாண்மை -1360 கோடி
சிறைசாலைததுறை- 392 கோடி
எரிசக்தி துறை - 20,115.58 கோடி
கீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி
அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி
நெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி
பயிர்க்கடன் - ரூ.11 ஆயிரம் கோடி
கால்நடை வளர்ப்பு-ரூ.199 கோடி
வேளாண்மை துறை -11,894 கோடி
அம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 18,540 கோடி.

*இயற்கை மரணங்களில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

*11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணனி திட்டம் தொடரும்.

*இலவச மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.966.46 கோடி ஒதுக்கீடு.

*தமிழக பட்ஜெட் 2020 : காவல்துறைக்கு 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு, அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு.

*சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்.

*கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

*மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்

*முத்திரைத்தாள் வரி 1% இருந்து 0.25% ஆக குறைப்பு.

*திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும்.

*நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.15 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

*புதிய தொழில் முனைவோருக்கு மூலதன மானியம் ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக அதிகரிப்பு.

*குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,364 நீர்ப்பாசன பணிகள் ரூ.500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

➤ தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ காவல்துறைக்கு - 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு.

➤ பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ உயர் கல்வித்துறை - 5,052 கோடி ரூபாய்  ஒதுக்கீடு.

➤ சுகாதாரத்துறை - 15,863 கோடி ரூபாய்  ஒதுக்கீடு

➤ தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

➤ தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

➤ தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.

*ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு.

*தமிழக பட்ஜெட் 2020-21: ராமநாதபுரம் மற்றும் விழுப்புரத்தில் ரூ.3,041 கோடி ரூபாய் செலவில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள். என தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 ஆண்டு சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages