அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரிப்பு.
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 64,600 ஆக அதிகரிப்பு- சீன அரசு.

*டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அமல்ராஜ் விழுப்புரம் அனந்தபுரம் அருகே உள்ள அத்தியூரில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். குரூப்-4, குரூப்-2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 47 பேரை கைது செய்துள்ளது சிபிசிஐடி போலீசார்.

* தகுதிநீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கக்கோரும் வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்.

சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என நம்புவதாக கூறி வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்.
*மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு ₨7,586 கோடி குறைந்துள்ளது.

*வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை சாதகமான நிலை அடையும் - நிதித்துறை செயலர்.

*கூடுதலாக 35,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க திட்டம் - நிதித்துறை செயலர்.

*பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட 26% கூடுதலாக நிதி ஒதுக்கீடு.

*சாலைகள், பாசன வசதி, மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு - நிதித்துறை செயலர்.

*நிதி நெருக்கடி இருந்தாலும், வளர்ச்சியை நோக்கி தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது - நிதித்துறை செயலர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாட்டில் அதிக நிதி வழங்குவது தமிழகம்தான் - நிதித்துறை செயலர் கிருஷ்ணன்.

*கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

*நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.
உடல் மற்றும் மனதளவில் குற்றவாளி நலமுடன் உள்ளார் - உச்ச நீதிமன்றம்.

*தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

*சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு.

*மானிய கோரிக்கை மீதான விவாதம் 20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

*தமிழகத்தில் 2019-20ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது -  நிதித்துறை செயலர் கிருஷ்ணன்.

*2020ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்கள் - 3,02,54,172, பெண்கள் - 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் - 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர் - தேர்தல் ஆணையம்.

*அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள போர்ச்சுக்கீசிய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டிசௌசாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

*2015 - 2018 வரை குரூப்4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணியிடங்களை நிரப்பும் வரை 2019 ஜூலை 14ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தடை கோரிய வழக்கில்.

*டிஎன்பிஎஸ்சி செயலர், தமிழக வருவாய்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

*சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி தலைவராக யாரும் பதவியேற்க உச்ச நீதிமன்றம் தடை.
முதலில் வெற்றி சான்றிதழ் பெற்ற தேவி ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

*2015 - 2018 வரை குரூப்4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணியிடங்களை நிரப்பும் வரை 2019 ஜூலை 14ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தடை கோரிய வழக்கில்.

டிஎன்பிஎஸ்சி செயலர், தமிழக வருவாய்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

*குமரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

*லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1.85 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு பிப்.28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.

*7 நாள் விசாரணையில் ஜெயக்குமாரிடம் இருந்து 4 கார்கள், லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

*டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - போர்ச்சுக்கல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து*

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்தியா - போர்ச்சுக்கல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரேபெலோ 4 நாள் அரசுமுறை சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

*தருமபுரி மாவட்டம் நடப்பனஅள்ளி கிராமத்தில் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

*மாது என்ற விவசாயிடம் ரூ.11 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இண்டூர் மின்வாரிய உதவிப் பொறியாளர் அகல்யா, வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

*திருவாரூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்த புகாரில் 12 எழுத்தர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

*நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்களை பணி விடுவிப்பு செய்து திருவாரூர் ஆட்சியர் ஆனந்த் ஆணையிட்டுள்ளார்.

*புகார்கள் குறித்து கடந்த 2 நாட்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தர வேறுபாடு, எடை குறைவு தெரிய வந்ததால் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

*டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயகுமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்.

*சென்னை ஜார்ஜ்  டவுன் நீதிமன்றத்தில் செல்வேந்திரன் சரண்.

*பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் செல்வேந்திரன்.

*எழும்பூர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் பிரபாகரன் என்பவரும

*டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட வினோத்குமார், சீனிவாசன், ராஜசேகர் ஆகியோருக்கு  ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

*கன்னியாகுமரியை சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபிரசாத் உடல்நலக் குறைவால் காலமானார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages