அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,24) வருகிறார். இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப், டிரம்பின் பயண விபரம்:
*காலை, 11:40 மணி: டிரம்ப், மனைவி மெலனியா, ஆமதாபாத் விமான நிலையம் வருகை. பிரதமர் மோடி வரவேற்கிறார்.
*பகல், 12:15 மணி: காந்தியின் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். காந்திக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
*1:05 மணி: கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த, 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போல, குஜராத் அரசு சார்பில் உலகின் பெரிய ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடக்கிறது.
*3:30 மணி: தாஜ்மஹாலை காண டிரம்ப் - மெலனியா, ஆக்ரா செல்கின்றனர்.
*இரவு, 7:30 மணி : டில்லி ஐ.டி.சி., மயூரா ஓட்டலில் தங்குகின்றனர்.
*காலை, 10:00 மணி: டில்லி ராஷ்டிரபதி பவனில், டிரம்புக்கு வரவேற்பு.
*10:30 மணி: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
*11:00 மணி: டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில், பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத தடுப்பு உட்பட பல துறைகளில், இந்திய - அமெரிக்க உறவு குறித்து, பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
*பகல், 12:40 மணி : ஒப்பந்தங்கள் பரிமாற்றம், செய்தி வெளியீடு.
*இரவு, 7:30 மணி: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப்.
*இரவு, 10:00 மணி: டில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் டிரம்ப்.
No comments:
Post a Comment