📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 பிப்ரவரி - 24 திங்கள் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சூசகம் - மறைமுகம்
➖➖➖➖➖➖➖➖➖➖
டிரம்பின் வருகை இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்தும்; பிரதமர் மோடி
வாஷிங்டன் : அமெரிக்காவில் முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் சுட்டதில் இந்திய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2,592 ஆக உயர்வு
உடுமலை:உடுமலை அருகே, பசுமையான மரங்களை வெட்டி அகற்றி, கட்டடம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு 7 பேர் பலி
கோவை:போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பஸ்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; தனியார் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ள நிலையில், அரசு பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று, போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருகே மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுடில்லி : 'டில்லி, ஷாஹீன் பாக் பகுதியில் நடந்து வரும் போராட்டத்தால் ஏற்பட்டுள்ளபோக்குவரத்து சிக்கலுக்கு, போராட்டக்காரர்கள் காரணமல்ல; போலீசார் தான் காரணம்' என, உச்ச நீதிமன்றத்தில், முன்னாள் தலைமை தகவல் கமிஷனர் வஜாஹத் ஹபிபுல்லாதெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்; நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
பெங்களூரு : கர்நாடகாவில் மடிகேரியில் உணவு வீணடிப்பதை தடுப்பதற்காக 10 கிராமுக்கு 100 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை மடிகேரி தனியார் சொகுசு விடுதி ஒன்று கட்டாயமாக்கியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது - 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
கொல்லம் : கேரளாவின் குளத்துப்புழாவில் சாலையோரம் கிடந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் குறித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்துகின்றனர்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகல்: 26-ந் தேதி அறிவிக்கிறது
டோக்கியோ: சீனாவை உலுக்கி வரும், 'கொரோனா' வைரஸ் காரணமாக, ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
இத்தாலியில் 2 பேர் பலி: தென்கொரியா, ஈரான் நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுகிறது
புதுடில்லி: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல், 'காஸ்' வழங்கும் ஒப்பந்தத்தை எதிர்த்து, 'அதானி' நிறுவனம் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்
சென்னை : சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டம் முஸ்லீம்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயானது அல்ல. பா.ஜ.,வுக்கும் இந்திய மக்களுக்கும் இடையேயானது. சிஏஏ இந்தியர்களை பாதிக்காது என்றால் வேறு யாரை பாதிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
‘சாதனைகள் படைக்க ஊனமும், வயதும் தடையல்ல’ - ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
புதுடில்லி: சுங்கச் சாவடிகளில், 'பாஸ்டேக்' வழிக்குள், டேக் இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மோதல்: போலீசார் கண்ணீர் புகை வீச்சு
கமலின் 60ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்து பயணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்பிறகு தம்பிகளுக்கும் அவர்கள் வழிவிட வேண்டும் என்றும் விஜய்யை மனதில் வைத்து பேசினார்.
மாணவர் சேர்க்கை குறைந்ததால் 11 என்ஜினீயரிங் கல்லூரிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு - அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம்
புதுடில்லி:'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்லுயிர் தன்மை பற்றி பேசும்போது, தமிழ் பெண் புலவரான அவ்வையாரின், 'கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.
ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
ஜெயலலிதா பிறந்தநாள்- பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி
பெண் குழந்தை பாதுகாப்பு நாள் கொண்டாட அ.தி.மு.க.வுக்கு அருகதை இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு
மார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி
சென்னை :கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
தமிழகம் முழுவதும் கட்சியினரை சந்திக்கிறார்கள்: எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் அதிரடி திட்டம்
ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அமைச்சர் தங்கமணி பேச்சு
தர்பூசணியில் மோடி, டிரம்ப் உருவம் வரைந்து தேனி வாலிபர் அசத்தல்
குளச்சல் அருகே நள்ளிரவில் துணிகரம்: கப்பல் ஊழியர் வீட்டில் 21 பவுன் நகைகள் கொள்ளை
சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் 9-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்
தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ரவி பூஜாரி இந்தியா அழைத்து வரப்படுகிறார்
கங்கனாவின் 2–வது தோற்றம் வெளியானது ஜெயலலிதா கதையில் பூர்ணா, மதுபாலா
காமன், பிரக்கோலி, சோள சமோசா, காஜூ கத்லி.. சமையல் கலை நிபுணர் சுரேஷ் கண்ணாவின் கை மணத்தில் அதிபர் ட்ரம்புக்கான இந்திய உணவுகள் தயார்!!
தொலைக்காட்சி தொடர்களில் சினிமா பட தலைப்புகளை பயன்படுத்துவதா? பட அதிபர் கேயார் எதிர்ப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19ம் கட்ட விசாரணை தொடங்கியது
பாபரின் பெயரில் மசூதி கட்ட சரத்பவார் விரும்புவது ஏன்? தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி
நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் துணை சுகாதார செவிலியர் பயிற்சி மையத்தில் மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டம்
பெங்களூர்: மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்
மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் பழுதடைந்த சாலையால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
பெலகாவியில் ராணுவ வீரர் கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன், மனைவி கைது - கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
சீரமைப்பு பணிகள் நடக்கின்றன எடியூரப்பா, விரைவில் காவேரி பங்களாவில் குடியேறுகிறார்
சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணுக்கு மிரட்டல் கல்லூரி நண்பர் கைது
ரூ.200 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்; கிரண்பெடி ஆய்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.81 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.32 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment