2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அகமதாபாத் விமானநிலையத்தில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி.
*விமான நிலையத்தில் அதிபர் டிரம்பிற்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு-இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
*அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்-அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணம் இதுவாகும்.
*அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
*சபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் அதிபர் டிரம்பிற்கு இந்திய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு.
*அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் வந்தடைந்தார் அதிபர் டிரம்ப்.
*மொரோடா ஸ்டேடியத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவேற்பு.
*சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது.
*களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் -பிரதமர் மோடி.
*உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கிறேன் - பிரதமர் மோடி.
*இந்தியா - அமெரிக்கா உறவு மற்ற நாடுகளுக்கு இடையிலான உறவு போன்றதல்ல - மோடி.
அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மகளை மனதார வரவேற்கிறேன், அமெரிக்க அதிபரின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது - பிரதமர் மோடி.
*சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் ஹிந்தியில் நமஸ்தே என வணக்கம் சொன்ன அதிபர் டிரம்ப்.
*இந்தியாவிற்கு வந்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு.
*இந்தியாவிற்காக எனது நண்பர் மோடி இரவு பகல் பாராமல் உழைக்கிறார்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
*ஜனநாயகத்தின் ஒரு அற்புதம் இந்தியா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்.
*மக்கள் நலனை முன்னிறுத்துபவர்கள் வலுவான தலைவராகின்றனர்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
*அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு நடத்தும் நாடு இந்தியா - டிரம்ப்.
*இந்தியாவின் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி, உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரனம் -அதிபர் ட்ரம்ப்.
*இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தயார்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
*70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது -டிரம்ப் பேச்சு.
*இஸ்லாமிய பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பை அமெரிக்கா ஒடுக்கியுள்ளது- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
*தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளார், அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள்.
*இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி.
*விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர் - அதிபர் டிரம்ப்.
*கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது - அதிபர் டிரம்ப்.
*இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி - அதிபர் டிரம்ப்.
*இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு - அதிபர் டிரம்ப்.
*சபர்மதி ஆசிரமத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தம்பதிக்கு, காந்தி பயன்படுத்திய உபகரணங்களை மோடி விளக்கினார்.
காந்தி பயன்படுத்திய ராட்டையை ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் கீழே அமர்ந்து கையால் சுற்றிப் பார்த்தனர்.
அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் மோடி விளக்கி கூறினார். அவற்றை ட்ரம்ப்பும் மெலனியாவும் மிகவும் ரசித்து, வியந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment