அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*இளைஞர் குத்திக்கொலை - கிராமங்களுக்கு இடையே மோதல்
போலீசார் குவிப்பு:
திருவண்ணாமலை : கலசப்பாக்கம் மேலாரணி பகுதியில் கலையரசன் என்ற இளைஞர் குத்திக்கொலை.
இளைஞர் கொலை காரணமாக 2 கிராமங்களுக்கு இடையே மோதல் - 8 பேர் காயம், போலீசார் குவிப்பு.
*முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு மலர் தூவி முதல்வர் பழனிசாமி மரியாதை.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை. சென்னை அதிமுக தலைமையகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை.
*ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு மார்ச் 9ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் கெடு. அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.
*முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்.
தலைமை செயலகம் அருகே 'மகிழம்' மரத்தை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
*தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19ம் கட்ட விசாரணை தொடங்கியது.
விசாரணைக்கு ஆஜராக நடிகர் ரஜினிகாந்த் உட்பட 31 பேருக்கு சம்மன் அனுப்பட்டது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய நடிகர் ரஜினியின் மீது ஆணையம் இன்று முடிவு.
*வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 33 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம். இன்று ஒரே நாளில் சவரனுக்கு 752 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை. கிராமுக்கு 94 ரூபாய் உயர்ந்து 4166 ரூபாய்க்கு விற்பனை.
*தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர்; பாதுகாப்பான நகரமாக சென்னை, கோவை உள்ளது-முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை.
மத்தியில் திமுக அங்கம் வகித்த போதுதான் என்.பி.ஆர். சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது - முதல்வர் பழனிசாமி.
*டெல்லியில் வன்முறை:துப்பாக்கிச்சூடு.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு.
*சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் டெல்லி விரைகிறார் பிரதமர் மோடி.
*டெல்லி வன்முறை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை தகவல்.
*டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது காவல்துறை.
*ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு.
*இயக்குநர் சிவா இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168- படத்தின் தலைப்பு ”அண்ணாத்த” என வைக்கப்பட்டுள்ளது.
*வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டு அரசிதழ் வெளியிட்டப்பட்டுள்ளது.
*தமிழகத்திற்கு அதிமுக அரசுதான் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்தது - முதலமைச்சர் பழனிசாமி.
அதிமுக அரசின் அனைத்து திட்டங்களும் காலத்தால் அழிக்கமுடியாத திட்டங்கள் - முதலமைச்சர்.
அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் மு.க.ஸ்டாலின்.
ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் உதாரணம்- முதல்வர் பழனிசாமி.
*நெய்வேலி என்எல்சி நிர்வாகத்துடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லையெனில் நாளை இரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு.
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை.
No comments:
Post a Comment