பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் என்ன?. - Agnipuratchi

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் என்ன?.

Share This

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் என்ன?.

தேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே வேளாண் மண்டலங்கள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி 80% மக்கள் வேளாண்மையை சார்ந்திருக்க வேண்டும். இருபோக சாகுபடி நிலமாக இருக்க வேண்டும், அதிக விளைச்சல் திறனுள்ள மண்வளமுடையதாக இருக்க வேண்டும்,
இதற்கான நீர்வள ஆதாரங்களையும் கொண்டிருக்க வேண்டும், இதன் அடிப்படையில் டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனால் விவசாயிகள் அடையும் பலன்களும் ஏராளம். அப்படி என்னென்ன பலன்களை விவசாயிகள் அடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பலன்கள்:

அரசின் வேளாண் வளர்ச்சித்திட்டங்கள், அரசு மானியம், சலுகைகள், கடனுதவி ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்படும். மேலும், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில், மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அதே போன்று வேளாண் சார்ந்த தொழில்துறைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது பதப்படுத்துதல், தரம்பிரித்தல், கொள்முதல் மற்றும் சேமிப்புக் கிடங்குகள், மின்னணு சந்தை  ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தக வளாகம் ஆகியவற்றுக்கு வேளாண் மண்டலத்தில் முன்னுரிமை வழங்கப்படும். வேளாண்மை நீங்கலான மற்ற தொழில்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும். அதன் அடிப்படையில் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages