அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பாங் ஜூன் ஹோ- விற்கு "பாரசைட்" என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த தழுவப்பட்ட திரைப்படத்திற்கான விருது தைக்கா வைத்திதிக்கு "ஜோ ஜோ ராபிட்" படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த பின்னணி இசைக்கான விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்.

சிறந்த வெளிநாட்டு படம் ,சிறந்த திரைக்கதை மற்றும்  சிறந்த இயக்குனர் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை   வென்றுள்ளது பாராசைட்.

1917 திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை  வென்றுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த ஒலிக் கலவை மற்றும் சிறந்த கிராஃபிக்ஸ் பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை  வென்றது.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் பட நாயகன், நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றார்.

ஆஸ்கர் விருதுக்கு 4 ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்ட வாக்கீன் பீனிக்ஸ், முதல்முறையாக விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான  ஆஸ்கார் விருதை ஜூடி படத்தில் நடித்த ரென்னி வென்றார்.

*நடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன். அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரமும் இன்று ஆஜராகி விளக்கமளிக்க வருமான வரித்துறை உத்தரவு.

*2016 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மேலும் 4 பேர் முறைகேடு செய்து பணியில் சேர்ந்துள்ளதாக தகவல்:
கைதான விஏஓ நாராயணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிபிசிஐடி தகவல்.

*நாடு முழுவதும் சமுதாய சமையற்கூடங்களை அமைக்க உத்தரவிட கோரிய பொதுநல வழக்கு:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு அபராதம், 24 மணி நேரத்தில் பதிலளித்தால் ரூ. 1 லட்சம், 24 மணி நேரம் கழித்து பதிலளித்தால் ரூ. 5 லட்சம் அபராதம் என உத்தரவு.

*கார்ப்பரேட் நிறுவன வரி வசூல் கணிசமாக குறைந்துள்ளது - மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு.

நாட்டின் பொருளாதார நிலையை நிதியமைச்சரின் பேச்சு பிரதிபலிக்கவில்லை. பணமதிப்பிழப்பு கொண்டு வந்தது மிகப்பெரிய வரலாற்று தவறு - ப.சிதம்பரம்.

*நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அவமதிப்பு வழக்கு.

வழக்கறிஞர் ஜெய் சுகின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறி விசாரணைக்கு ஏற்க மறுப்பு.

*எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தம்.
இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, மோகன் பகவத்தின் கனவை நிறைவேற விடமாட்டோம் - ராகுல் காந்தி.

*போக்குவரத்து பாதிப்பு காரணமாக டில்லி ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கோரி தொடரப்பட்ட  வழக்கு.

டெல்லி காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் பதிலளிக்க உத்தரவு, வழக்கு விசாரணை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்.

*மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் தேர்விலும் முறைகேடு:

சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் தேர்விலும் முறைகேடு என குற்றச்சாட்டு. தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக சி.ஐ.எஸ்.எஃப் வீரர் பிரிகு பாருயா பணிநீக்கம்.

*ஏப்ரல் இறுதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்.

மாநகராட்சி, நகராட்சிகளுக்கும்  தேர்தல்  நடைபெற வாய்ப்பு.
தேர்தலை எதிர்கொள்ள தயாராகுமாறு அதிமுக  நிர்வாகிகளுக்கு  முதலமைச்சர் அறிவுரை. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர்  சூசக  பேச்சு.

*முட்டை விலை 25 காசுகள் உயர்வு.

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் அதிகரித்து ஒரு முட்டை ரூ3.70 காசுகளாக விலை நிர்ணயம்.

*டிஎன்பிஎஸ்சியின் குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி.

கைதான 3 பேரும் ஏற்கெனவே கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனின் கூட்டாளிகள் ஆவர்.

*"தண்ணீர் விழிப்புணர்வு குறித்து பாடல்" - ஏ.ஆர்.ரகுமான்:

தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்த தவறிவிட்டோம். தண்ணீர் விழிப்புணர்வு தொடர்பாக உலகளவில் பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளோம். - ஏ.ஆர்.ரகுமான்.

*ஸ்ரீஹரிகோட்டாவை விட தமிழகத்தில் சிறந்த தொழில்நுட்பத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.

சந்திரயான்-3 மூலம் மெதுவாக நிலவில் இறங்க வேண்டிய வழிமுறைகளை செய்ய வேண்டியுள்ளது. நிலவில் நீர் இருப்பதை சந்திரயான்-2 மூலம் உறுதிப்படுத்த முடியும்- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.

*மத்திய குற்றப்பிரிவு முன், பிப். 14ந் தேதி ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவு.

போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி.

*முன்ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய போலீசார் மனு தாக்கல் செய்யலாம்.
முன்ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய போலீசார் மனு தாக்கல் செய்யலாம்- நீதிமன்றம்.

*காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
- பொன்.ராதாகிருஷ்ணன்.

*நடிகர் விஜய் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை. பாஜகவுக்கும், வருமானவரி சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; எதிர்க்கட்சிகளின் கருத்து தவறானது. - பொன்.ராதாகிருஷ்ணன்.

*டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தர்மேந்திர பிரதானுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு.

காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான முதல்வரின் கடிதத்தை வழங்கினார்.

*ரஜினிக்கு சலுகை தரும் வருமானவரித்துறை, மற்றொரு புறம் விஜய் போன்றோர் மீது நடவடிக்கை - மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது திமுக எம்பி தயாநிதி மாறன் பேச்சு.

*தமிழகத்தில் 7 ஆண்டுகளில் வேலைவாய்பின்மை 5.3% உயர்வு. இது தேசிய சராசரியை விட அதிகம் - நாடாளுமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்.

*11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களில் திருத்தம் இருந்தால் வரும் 14ம் தேதிக்குள் இணையதளம் வழியாக சரிசெய்ய வேண்டும்.

கூடுதலாக மாணவர்களை தேர்வு பட்டியலில் சேர்க்கும் பணிகளையும் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages