அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*கேரளாவில் 2வது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்.
ஏற்கனவே திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் மேலும் ஒருவர் பாதிப்பு. சீனாவில் இருந்து வந்தவரை தனிமைப்படுத்தி, தனி வார்டில் வைத்து கண்காணிப்பு.
*ஏர் இந்தியாவின் 2வது தனி விமானம் 323 இந்திய பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது. மாலத்தீவைச் சேர்ந்த 7 பேரும் ஊகானிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
*ராணிப்பேட்டை : அதிக மாசு ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாக 29 தொழிற்சாலைகளுக்கு ரூ.6.88 கோடி அபராதம் விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை.
*டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வரும் சித்தாண்டி மீது வழக்குப்பதிவு.
கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.
*கடலூரில் வரும் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை:
கடலூரில் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுவதையொட்டி வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
*குரூப் 4 தேர்வு முறைகேடு - அதிர்ச்சித் தகவல்:
குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் குறித்து அதிர்ச்சி தகவல்:
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வைப்பதாகக் கூறி 50 முதல் 100 பேரிடம் பணம் பெற்றது விசாரணையில் அம்பலம்.
ரூ. 5 கோடி வரை ஜெயக்குமார் பணம் பெற்றது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
*தமிழகத்தில் ஒரு சீனர் உட்பட 6 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி:
திருவண்ணாமலை, திருச்சி, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் 3 பேர் அனுமதி; சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் சீனர். - பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி.
*‘நிறைகளும், குறைகளும் இணைந்த பட்ஜெட்’ நதிகள் இணைப்புக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை; தனி நபரின் வருமானத்தை உயர்த்தக்கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது
ஏமாற்றம். - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
*நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் தனித்தனியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீது விசாரணை துவங்கியது.
*தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை, தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
*பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் சுகாதாரத்துறை எடுத்துள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*பாலியல் குற்றவாளிகள் தெலுங்கானாவில் என்கவுன்டர் செய்யப்பட்டதை மக்கள் வரவேற்று கொண்டாடினர் - துஷார் மேத்தா.
*நிர்பயா குற்றவாளிகளின் செயல்களால், மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது - அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம்.
*நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்:
*முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் 10:30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
*பட்ஜெட், தொழில்வளர்ச்சி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்.
*தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார்
பாஜக அரசு தமிழகத்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது - சசிகலா புஷ்பா
*கொரோனா வைரஸ் பாதிப்பு நாடுகளில் இருந்து வந்த 799 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி.
No comments:
Post a Comment