இந்த அதிசயம் இங்கு நடக்கவில்லை.... வேறு எங்கே? நடைபெற்றது என்று சீனாவில் நடைபெற்ற புதிய மருத்துவமனை பற்றி - மருத்துவர் இராமதாசு அய்யா வினா? - Agnipuratchi

இந்த அதிசயம் இங்கு நடக்கவில்லை.... வேறு எங்கே? நடைபெற்றது என்று சீனாவில் நடைபெற்ற புதிய மருத்துவமனை பற்றி - மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

Share This

இந்த அதிசயம் இங்கு நடக்கவில்லை.... வேறு எங்கே? நடைபெற்றது என்று  சீனாவில் நடைபெற்ற புதிய மருத்துவமனை பற்றி - மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களோ, தொடர்வண்டி திட்டங்களோ அறிவிக்கப்பட்டால், அதன் பின்னர் அந்த திட்டம் செயல்வடிவம் பெற குறைந்தது 25 ஆண்டுகளாவது ஆகும்.
ஆனால், ஒரு நகரத்தில் மருத்துவம் சார்ந்த நெருக்கடி நிலைமையை சமாளிக்க 11 நாட்களில் உலகின் மிகப்பெரிய மருத்துவமனை மின்னல் வேகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் மருத்துவமனை 1000 படுக்கைகளை கொண்டது. இந்த மருத்துவமனையில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. உலகத்தரத்தை விட உயர்வான சிகிச்சை இங்கு கிடைக்கிறது. இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் கூட இங்கு வந்தால் காப்பாற்றப்படுகிறார்கள்.

ஜனவரி 24ம் தேதி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் .துரிதமாக கட்டி முடிக்கப்பட வேண்டுமென்பதற்காக இரவு பகலாக பணிகள் நடந்தன. பிப்ரவரி 2-ஆம் தேதியுடன்  பணிகள் முடிவடைந்து 3-ஆம் தேதி முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை தொடங்கி விட்டது.

இந்த அதிசயம் நிச்சயமாக இந்தியாவில் நிகழ்த்தப்படவில்லை. அப்படியானால் வேறு எங்கே?
இதற்கான பதில் உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அவ்வாறு தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள்! என் வாசகர்களுக்கு வினா எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages