தினமலர் பங்குதாரர் இராகவன் மனைவி மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

தினமலர் பங்குதாரர் இராகவன் மனைவி மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

தினமலர் பங்குதாரர் இராகவன்
மனைவி மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

தினமலர் நாளிதழின் பங்குதாரர் அமரர் இராகவன் அவர்களின் மனைவியும், தினமலர் திருச்சி மற்றும் வேலூர் பதிப்புகளின் ஆசிரியர் முனைவர் இராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோரின் தாயாருமான சுப்புலட்சுமி அவர்கள் காலமான செய்தியறிந்து பெரும் வேதனை அடைந்தேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து திருச்சியில் வாழ்ந்து வந்த அவர், இதழியல் துறையில் சிறப்பாக பணியாற்றி வந்த கணவருக்கு பின்புலமாகவும், மகன்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு வந்தார். அவரது மறைவு தினமலர் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

திருமதி. சுப்புலட்சுமி அவர்களை இழந்து வாடும் முனைவர் இராமசுப்பு, ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோருக்கும், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தினமலர் பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages