அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*நாமக்கல்: ராசிபுரம் அருகே வெள்ளக்கல்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரில் பழனியாண்டவர் கோழிப்பண்ணை தீவன ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
*டெல்லி வன்முறை வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்:
கொலைக்கான தண்டனை சட்டப்பிரிவு 302 இன் கீழ் தபால்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் நடவடிக்கை.
*இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்தார் இயக்குநர் ஷங்கர்.
*நாமக்கல்: ராசிபுரம் அருகே வெள்ளக்கல்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரில் பழனியாண்டவர் கோழிப்பண்ணை தீவன ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
*தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு - மத்திய உள்துறை அமைச்சகம். ஜப்பான், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் விசா தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
*வேலூர் குடியாத்தம் எம்எல்ஏ காலமானார்
குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனவர் காத்தவராயன்.
சென்னை அப்பலோவில் உடல் நலக்குறைவால் எம்எல்ஏ காத்தவராயன் உயிர் பிரிந்தது
கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் காலமானதால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98ஆக குறைந்துள்ளது.
நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!:
இரண்டு நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து; சென்னை அண்ணா அறிவாலயத்தில், மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கயிருந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து
*சட்டமன்ற உறுப்பினர் மறைவு - ஸ்டாலின் இரங்கல்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் - ஸ்டாலின்.
*சட்டமன்ற உறுப்பினர் மறைவு - ஆளுநர் இரங்கல் வேலூர்: குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல். காத்தவராயன் மறைவு குடியாத்தம் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
*கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து உலகப்புகழ்பெற்ற டோக்கியோ டிஸ்னிலேண்ட் மற்றும் டிஸ்னீசியில் உள்ள இரண்டு டிஸ்னி ரிசார்ட்டுகள் பிப்ரவரி 29 முதல் மார்ச் 15 வரை மூடப்படுகிறது.
*போராட்டத்தின்போது, அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்த உத்தரவுகள் ரத்து.
அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு.
*மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை - உயர்நீதிமன்றம்:
அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம். அரசு டாக்டர்களின் பணிமாறுதல் உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம்.
*ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 32,568-க்கு விற்பனை.
*நிதியமைச்சர் வீட்டின் முன் போராட்டம்:
டெல்லியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இல்லத்தின் முன் அகாலிதளத்தினர் போராட்டம்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம்.
தடுக்க முயன்ற போலீசாருடன் தள்ளுமுள்ளு - பரபரப்பு.
*டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா பலமுறை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
*கூட்டணி அமைக்கும்போதே தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கோரி இருந்தோம் - பிரேமலதா விஜயகாந்த்.
அதிமுக தலைமை நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த். சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும்!" - பிரேமலதா விஜயகாந்த்.
*சட்ட-ஒழுங்கு ஆய்வாளர்
ஆயுதப்படைக்கு மாற்றம்:
சென்னை: காசிமேடு சட்ட-ஒழுங்கு ஆய்வாளர் இசக்கி ஆயுதப்படைக்கு மாற்றம் இளைஞர் கொலை சம்பவத்தை தடுக்க தவறியதால் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நடவடிக்கை.
*அரசுக் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள காலை, மாலை சுழற்சி வகுப்புகளை ஒன்றாக இணைக்க முடிவு. சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
*பொதுப்பணித்துறை திட்டங்களின் நிலை, புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை:
தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு.
*திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வரும் 9-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவிப்பு.
*டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரிப்பு. வன்முறை பாதித்த ஜாஃப்ராபாத் பகுதியில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு.
*தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி - டி.என்.பி.எஸ்.சி.
விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் - அரசுத் தரப்பு பதில்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை.
ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*சுட்டுக்கொல்லப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் மகள் ஆன்றீஸ் ரிநிஜாவிற்கு இளநிலை உதவியாளர் பணி. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.
*சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த நம்முடைய சட்டங்கள் போதுமானதாக இல்லை.
குற்றவாளிகளை அடையாளம் காட்ட வெளிநாடுகளை போன்று புதிய முறைகளை கையாள வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி.
*சாலிகிராமம் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து:
சென்னை: சாலிகிராமத்தில் உள்ள படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து! படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் யாருக்கும் காயம் இல்லை - காவல்துறை விசாரணை.
*சுட்டுக்கொல்லப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் மகள் ஆன்றீஸ் ரிநிஜாவிற்கு இளநிலை உதவியாளர் பணி. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.
*தென்காசி: நெட்டூரில் 2016ஆம் ஆண்டில் 3 பேரை வெட்டிக்கொலை செய்த குற்றவாளி முத்துராஜூக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவிந்தசாமி, அவரது மனைவி, மகள் ஆகியோரை முத்துராஜ் வெட்டிக் கொன்றதாக வழக்கு.
*போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திர பதிவு செய்வதை தடுக்க பத்திர பதிவுக்கு முன்பே உட்பிரிவு பரிசீலனை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் - அரசாணை வெளியீடு.
*பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கு-இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜா இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உயர்நீதிமன்றம் அதிரடி.
*டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு.
*வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு குழுக்கள் மூலம் உதவிகள் வழங்க நடவடிக்கை- அரவிந்த் கெஜ்ரிவால்.
*தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் எனக்கூறி கண்டனம் தெரிவித்து சென்னை, திருச்சி, கடலூர், நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக பேரணி.
*குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பணியில் உள்ள 60 அதிகாரிகள் மீது வழக்கு- டி.என்.பி.எஸ்.சி. அதிரடி நடவடிக்கை. டி.எஸ்.பி., துணை ஆட்சியர் உட்பட பலர் சிக்க உள்ளதாக தகவல்.
*ராஜீவ் கொலை வழக்கு - நளினி புதிய மனு. அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் - மனுவில் கோரிக்கை.
*மாநிலங்களவை இடம் வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக துணை செயலர் சுதீஷ் சந்திப்பு. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வரை நேரில் சந்தித்து பேசி வருகிறார் சுதீஷ்.
*ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெறும்.
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.- பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.
*திருவண்ணாமலையில் ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மார்ச் 1 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் www.JoinIndianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment