அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாங்கில் துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 2 லக்ஷர்-இ-தொய்யா தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
*தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினி.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனுதாக்கல். நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள் இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி விலக்கு கேட்டுள்ளார் ரஜினி. கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் - ரஜினி.
*கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த தமிழக அரசின் அரசாணை ரத்து. 2017-ம் ஆண்டு ஜூலை 19-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு.
*பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை.
*நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னால் குற்றவாளிகள் அவரவர் குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் உள்ளதா என தெரிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் கடிதம்.
*ட்ரம்பின் இந்திய வருகையையொட்டி பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்
*சிஏஏவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்- மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் சவால்.
*கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்.
நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாமில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும்,
காய்ச்சல்,இருமல்அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்- மத்திய அரசு.
*தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் நடக்கிறதா? அல்லது நடப்பதாக கணக்கு காட்டப்படுகிறதா? என்பதை திமுகவினர் கண்காணிக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
*நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
*தேசவிரோத போராட்டங்களை கண்டித்து பிப்ரவரி. 28ம் தேதி மாவட்டந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி - தமிழக பாஜக அறிவிப்பு.
*பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது - சென்னை உயர்நீதிமன்றம்:
*பெண் பணியாளரின் பாலியல் புகாரை எதிர்த்து புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து.
*பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது:
துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
*சிஏஏவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்- மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் சவால்.
*கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்.
நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாமில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும், காய்ச்சல்,இருமல்அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்- மத்திய அரசு.
*நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
*தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் நடக்கிறதா? அல்லது நடப்பதாக கணக்கு காட்டப்படுகிறதா? என்பதை திமுகவினர் கண்காணிக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
*தேசவிரோத போராட்டங்களை கண்டித்து பிப்ரவரி. 28ம் தேதி மாவட்டந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி - தமிழக பாஜக அறிவிப்பு.
*பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது - சென்னை உயர்நீதிமன்றம் பெண் பணியாளரின் பாலியல் புகாரை எதிர்த்து புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து.
*பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
*புதுச்சேரியில் கேசினோ மற்றும் சூதாட்ட கிளப் நடத்த அனுமதி கோரி புதுச்சேரி அரசு அனுப்பிய கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு. மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பி வைப்பு.
*தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,715ல் இருந்து 5,262 ஆக குறைக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து மதுக்கடைகள் குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி.
*வெலிங்டன் டெஸ்ட்: இந்திய அணி 165 ஆல் ஆவுட்.
வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 'வேகங்கள்' அசத்த, இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 165 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது.
*நியூசிலாந்து முன்னிலை.
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து 51 ரன்கள் முன்னிலை.
No comments:
Post a Comment