அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,662 ஆக அதிகரிப்பு.
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை தாண்டியுள்ளது - சீன அரசு.
*ஈராக்: பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்களது தூதரகம் அருகே ராக்கெட்டுகள் விழுந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
*யோகஹாமாவில் நிற்கும் கப்பலில் இதுவரை 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு.
138 இந்தியர்கள் உள்பட 3,711 பயணிகளில் இதுவரை 1,219 பேருக்கு கொரோனா சோதனை முடிந்துள்ளது- ஜப்பான் சுகாதார அமைச்சர்.
*நடுக்கடலில் 14 கிலோ தங்கம் பறிமுதல். இலங்கையில் இருந்து பைபர் படகில் தனுஷ்கோடிக்கு கடத்த முயன்ற ரூ.5.40 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். திருட்டு நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி கடத்தியபோது பறிமுதல்.
*முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், சட்டம் - ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை.
*டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவதூறு ஏற்படுத்துவதாக தயாநிதிமாறன் மீது வழக்குத் தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு அரசு அனுமதி.
*திமுக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டன.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
கையெழுத்து பெற்ற படிவங்கள் வரும் 19ம் தேதி குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.
*விழுப்புரம் பெரியதச்சூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத்ராஜை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவு. செஞ்சி அருகே இளைஞர் கொலை வழக்கை முறையாக விசாரிக்காததால் எஸ்.பி ஜெயகுமார் நடவடிக்கை.
*2015ம் ஆண்டு மகாராஷ்டிராவில் போலி பாஸ்போர்ட்டுடன் கைதாகி தலைமறைவாக இருந்த, நைஜீரிய கால்பந்து வீரர் இமானுவேல் யூக்கோச்சியா கோழிக்கோட்டில் கைது.
*சிஏஏ-க்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டம் தொடரும்.
சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்திய அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் அறிவிப்பு.
*மகாராஷ்டிரா : மும்பையில் நாளை தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தலைமையில் ஆலோசனை - அமைச்சர்களுக்கு அழைப்பு.
*வுகானிலிருந்து டெல்லி வந்த 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் உறுதி:
மருத்துவ ஆலோசனைக்குப் பின் 406 பேரும் நாளை விடுவிக்கப்படுவர் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
*நாகை:மயிலாடுதுறை-சீர்காழி சாலையில் சின்ன நாகங்குடி அருகே பைக்கில் சென்ற மகாலட்சுமி என்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பேருந்தை அடித்து உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
*எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி 28 வரை நீதிமன்ற காவல்.
புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.
No comments:
Post a Comment