3வது முறையாக டில்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். - Agnipuratchi

3வது முறையாக டில்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Share This

3வது முறையாக டில்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டில்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது. இவ்விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்று கொண்டார். மற்றும் அமைச்சர்களுக்கும் கவர்னர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவ்விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் இது எனக்கான வெற்றி அல்ல, டெல்லி மக்களுக்கான வெற்றி - முதல்வராக பதவியேற்ற பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு.

டெல்லி மக்களின் நன்மைக்கும் மற்றும் வளர்ச்சிக்காக மத்திய அரசோடு இணைந்து பணியாற்றுவோம். டெல்லி சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும். டெல்லியை சர்வதேச அளவில் உயர்த்த பிரதமர் மற்றும் மத்திய அரசின் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages