அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
*கேரள சுற்றுலா துறைக்கு கடும் பாதிப்பு-அமைச்சர்.
இன்று கேரள சட்டசபையில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்: பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்கு ஹோட்டல் முன்பதிவு நிரம்பியிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அறிக்கைகளுக்குப் பிறகு, முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் வெள்ளத்தின் போது கேரள சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டது. இது சுற்றுலாத் துறைக்கு மற்றொரு அடியாகும் என பேசினார்.
*குரூப் 4 முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி திமுக இளைஞரணி சார்பில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
*எதிர்க்கட்சிகள் கடும் அமளி : மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.
*உதயநிதியை முன்னிலைப்படுத்தவே திமுக டிஎன்பிஎஸ்சியை கண்டித்து போராட்டம் நடத்துகிறது.
சிறைக்கு சென்றவர், சொற்பொழிவாளர்,
பேச்சாளர் என்ற பல பட்டங்களை
உதயநிதிக்கு தரலாம்!”
- அமைச்சர் ஜெயக்குமார்.
*டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்.
தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி, மனைவி பிரியாவின் வங்கி கணக்குகள் முடக்கம்.
இருவரின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளதாக சிபிசிஐடி தகவல்.
*தோனி குறித்து கபில்தேவ் கருத்து:
நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாததால் இந்திய அணியில் இனி மகேந்திர சிங் தோனி இடம் பெறுவது சாத்தியமில்லை!"
-கபில்தேவ்.
*ரூ.9 கோடி மதிப்பில் சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
*அரக்கோணம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடத்தை, காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
*நிர்வாக காரணங்களுக்காக கோவை மாநகர் திமுக 2 மாவட்டங்களாக பிரிப்பு.
புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி நியமனம் - திமுக பொதுச்செயலாளர்.
* டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி கைது-ராமநாதபுரத்தில் கைது செய்தது போலீஸ்.
*இயக்குனர் கௌதமன் கைது
சென்னையில் இலுந்து தஞ்சாவூர் நோக்கி பயணம் செய்த இயக்குனர் கவுதமன் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே கைது.
தஞ்சை குடமுழுக்கில் ஏதாவது போராட்டம் செய்ய கூடும் என்ற தகவல் காரணமாக முன்னெச்சரிக்கையாக கைது.
*பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும்:
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் - வேலூர் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ஜவஹர் எச்சரிக்கை.
*சுதந்திர போராட்டங்களை வகைப்படுத்தவே முயற்சித்தேன், காந்தி மற்றும் நேரு குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை - பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே.
*மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
- வைகைச்செல்வன், அதிமுக.
*ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்த வழக்கு:
மேல்முறையீடு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். மறு வாக்கு எண்ணிக்கை கோரி திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அப்பாவு கோரிக்கையை ஏற்று மறுவாக்கு எண்ணிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வழக்கு தொடர்ந்தார்.
*”தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விளைநிலங்கள் பாழாகிறது;
*இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு அரசு செயல்பட வேண்டும்”.
- நாடாளுமன்றத்தில் திரு. திருச்சி சிவா. எம்.பி., அவர்கள் வலியுறுத்தல்.
*தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்துக்கு சம்மன்.
வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன்.
*5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்து தேவையில்லாத பதற்றத்தை அரசு உருவாக்காமல் இருந்திருக்கலாம்; தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது- கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.
*மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 12 வார கருவை கலைக்க அனுமதி வழங்க கோரி அவரது தாய் தொடர்ந்த வழக்கு:
பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்து அறிக்கை அளிக்க சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
*கூடங்குளத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு.
*பிரதமர் மோடி 'மேக் இன் இந்தியா' என்று முழக்கமிடுகிறார், ஆனால் இதுவரை ஒரு தொழிற்சாலையைக் கூட நிறுவவில்லை. இந்தியன் ஆயில், ஏர் இந்தியா, ரயில்வே ஆகியவற்றை விற்றுவிட்டனர், கூடிய விரைவில் செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவர் - ராகுல் காந்தி.
*கன்னியாகுமரி: நாகராஜா திருக்கோவில்' தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு பிப்ரவரி. 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
*கடலூர்; நெய்வேலி : 2018ம் ஆண்டு 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, ராமச்சந்திரன்(65) என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை - கடலூர் போச்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
*விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட - ஆட்சியர் அறிவிப்பு.
No comments:
Post a Comment