தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது குடமுழுக்கு விழா. விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம். - Agnipuratchi

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது குடமுழுக்கு விழா. விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம்.

Share This

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது குடமுழுக்கு விழா.
விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம்.

திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளம். பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் குவிந்தனர் பக்தர்கள்.

பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் இடுபட்டனர் காலை, 7:25 மணிக்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித நீர் குடங்கள் புறப்பட்டது.

காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமான மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும்; இரவு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும் நடக்கின்றன.

அனைத்து கோபுரங்கள் மீதும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு.கோவில் கலசத்திற்கு மகா தீபாராதனை.. ஏராளமான பக்தர்கள்   ஓம் நமச்சிவாய என விண்னை முட்டும் சத்தத்தில் தஞ்சை பெரிய கோவில். தமிழ், சமஸ்கிருதத்தில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விமர்சையாக நடைபெற்றது.
லட்சகணக்கான மக்கள் தரிசிக்க தஞ்சை பெரியகோயில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages