அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*வரும் மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் டோக்கியோவில் நடக்கவிருக்கும் இந்தாண்டின் ஒலிம்பிக்ஸ் ரத்தாக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல்.

*கடலூர்: நெய்வேலியில் ஒய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ராஜேந்திரன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு. கார் எரிந்து சேதம்.

*திருவண்ணாமலை : ஆரணியில் பட்டு தயாரிக்கும் நிறுவனங்களில் 2வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

*மார்ச் 9ல் கூடுகிறது சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு.

*மார்ச் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக பேரவை செயலர் சீனிவாசன் அறிவிப்பு .

*டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல்.

வன்முறை பகுதிகளுக்கு கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவம் அனுப்பிவைக்கப்படும்.

டெல்லி வன்முறை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம் அளித்தார். வன்முறை குறித்து பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடனும் அஜித்தோவல் பேச்சு.

*மதுரை : சிறார் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்த குமார் என்பவர் கைது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அறிக்கையின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை.

*தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.32,488க்கும், கிராம் 4,061க்கும் விற்பனை.

*நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் தனுஷ் கைது. பீகார் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முதல் 50 இடத்திற்குள் தேர்ச்சி பெற்றது சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்.

*கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று துவங்கியது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது, இதையொட்டி சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி தேவாலயங்களில் நடைபெற்றது.

*டெல்லி கலவரத்தில் உளவுப் பிரிவு அதிகாரி பலி.

காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரி அன்கித் சர்மா சந்தபாக் பகுதியில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிப்பு.
ஏற்கனவே ஒரு காவலர் இறந்த நிலையில் காவல் துறையை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

*திருச்சியில் இன்று முதல் மார்ச் 12 வரை 15 நாட்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கூடுவதோ, கூட்டங்கள் நடத்துவதோ கூடாது- காவல் ஆணையர்.

*டெல்லி சகோதர, சகோதரிகள் அமைதி காக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்.

அமைதியும் நல்லிணக்கமும் நமது பண்பாட்டின் அடையாளம் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட அனைத்து துறையினரும் பணியாற்றி வருகின்றனர் - பிரதமர் மோடி.

*ராஜஸ்தானின் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்காக மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் சென்ற பேருந்து பூண்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

பாலத்தை உடைத்து பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த 40 பேரில் சிலர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

*நெல்லை முன்னாள் எம்பி ராமசுப்புவிற்கு சொந்தமான குவாரி மற்றும் பெட்ரோல் பங்கில் வருமான வரித்துறையினர் சோதனை.

*சேலம்: தனது வீட்டை அபகரிக்க முயன்றதாக ஆயிஷா குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது.

*சி.பி.எஸ்.இ. 2018ல் நடத்திய நீட் தேர்விலும் முறைகேடு கண்டுபிடிப்பு.

தேர்ச்சி பெற்ற 2500 மாணவர்களின் ஆவணங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குநருக்கு சி.பி.சி.ஐ.டி பரிந்துரை.

சென்னையில் கைதான மாணவருக்கு உதவிய பெங்களூருவைச் சேர்ந்த இருவருக்கு வலை.

*டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன்லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு சமூகவிரோத கும்பலே காரணம் டெல்லியில் வசிக்கும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் வன்முறையை விரும்புவதில்லை.
- அரவிந்த் கெஜ்ரிவால்.

*சுவாமித்தோப்பு ஐயா வைகுண்டசாமி பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு.

*சி.ஏ.ஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் முதல் குரல் என்னுடையது - நடிகர் ரஜினிகாந்த்.

டிரம்ப் வருகையின் போது நடந்த வன்முறை உளவுத்துறையின் தோல்வி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறமாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்றார் -நடிகர் ரஜினிகாந்த்.

*டெல்லி வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு.

மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக குரு தேக் பகதூர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சுனில் குமார் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages