அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*சிஏஏ போராட்டம்: கைதானவர்கள் விடுவிப்பு.
சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு.
சிஏஏ எதிர்ப்பு போராட்டம்: சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட இஸ்லாமிய அமைப்புகள் ஒப்புதல்.
*சென்னை சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக கூறுவது பொய்யான செய்தி- சென்னை காவல்துறை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை குறித்து வெளியாகும் செய்திள் உண்மையில்லை- காவல் துறை.
*ஈரானில் இருந்து டீசல் கடத்தலா.....?:
ஈரான் நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு 21 ஆயிரம் டன் டீசல் கடத்தலா?
சரக்கு கப்பல் முகவரிடம் தூத்துக்குடி எஸ்பி விசாரணை.
உரம் கொண்டு வருவதாக கப்பலின் முகவர் கூறியதால், மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் கஸ்டம்ஸ் துறையினர் சந்தேகம்.
*புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.
மார்ச் 1 முதல் 14ம் தேதி வரை அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்கிறார், முதலமைச்சர்.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
*‘டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள்’:
குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம்.
அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும்.
- டிஎன்பிஎஸ்சி.
*பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிடுக.
பிப்.10ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் கடிதம். முதலமைச்சரின் கடிதத்தை, இன்று வெளியிட்டார் அமைச்சர் ஜெயக்குமார்.
*நாகை : நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி கண்காணிப்பாளர் உட்பட தொழிலாளர்கள் 36 பேர் பணியிடை நீக்கம்.
*தமிழகத்தில் ஐபிஎஸ் பதவிகள் நியமனத்தில் முறையாக விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
எஸ்.பி முதல் டிஜிபி வரையிலான பதவிகளில் ஐபிஎஸ் அதிகாரிகளை முறையாக நியமிக்க வேண்டும்-தமிழக தலைமைச்செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
*முட்டை கொள்முதல் விலை ரூ.4.21 ஆக நிர்ணயம் : 8 நாட்களில் 86 காசுகள் உயர்ந்தது முட்டை விலை.
*சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜவாஹிருல்லா, தெஹ்லான் பாகவி உள்ளிட்டோர் சந்திப்பு.
வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் குறித்து ஆணையருடன் பேச்சுவார்த்தை எனத் தகவல்.
*நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரையும் அவர்கள் சென்ற விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு.
கைது செய்த மீனவர்களை விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment