கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து
நிர்வாகிகளுடன் மருத்துவர் இராமதாசு அய்யா ஆலோசனை
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று காலையும், மாலையும் மாவட்ட வாரியாக தனித்தனியாக ஆலோசனை நடத்தினேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்த நான், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
இந்தக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன், இணைப் பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, அமைப்பு செயலாளர் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment