அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.
பணி நேரத்தில் அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை - தமிழக அரசு.

*உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு’

‘டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு. ஏற்கெனவே 30 பேர் இறந்த நிலையில் படுகாயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

*10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்ரல்.13ல் நிறைவு மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியீடு:

பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவு;மே.14ஆம் தேதி முடிவுகள் வெளியீடு.

பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு; ஏப்ரல். 24ஆம் தேதி முடிவுகள் அறிவிப்பு.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும்,
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும்,
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.
- அமைச்சர் செங்கோட்டையன்.

*பாஜக தலைவர்களை பாதுகாக்கவே, வன்முறை வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் மாற்றப்பட்டுள்ளார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு. உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில்தான் நீதிபதி முரளிதரன் மாற்றப்பட்டார் - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

*சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து சவரன் ரூ. 32,656-க்கு விற்பனை.

*டெல்லி கலவரத்தின் போது சிசிடிவி கேமரா உடைப்பு:

போலீசாரே கேமராவை உடைக்கும் காட்சிகள் வெளியானதால் பரபரப்பு.
குரேஜிகாஸ் பகுதியில், பெட்ரோல் நிலையம் அருகே இருந்த கேமரா உடைப்பு - பரபரப்பு.

*பண்ணையில் தீ விபத்து - பசுமாடுகள் உயிரிழப்பு:

*மதுரை உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி- நடுப்பட்டியில் மனோகரன் என்பவரது பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பசுமாடுகள் தீயில் கருகி உயிரிழப்பு!

*உடல்நலக்குறைவால் உயிரிழந்த திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி.

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல். கே.பி.பி. சாமி உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காக இருந்தவர் கே.பி.பி.சாமி - ஸ்டாலின்.

*இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

*ராமலிங்கம் கொலை -2 பேரிடம் விசாரணை:

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, என்.ஐ.ஏ 2 பேரிடம் விசாரணை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் மற்றும் துணைத்தலைவரிடம் என்.ஐ.ஏ. விசாரணை.

*காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு:
டெல்லி வன்முறை தொடர்பான காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை குடியரசு தலைவரிடம் அளிக்கின்றனர்.

*மதுரையில் இருந்து சவூதி அரேபியாவிற்கு செல்லவிருந்த 66 ஹஜ் பயணிகளின் பயணம் ரத்து கொரோனா தாக்கம் காரணமாக சவூதி அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை.

*ஹைதராபாத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு.

*அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்ட விவகாரம் "அமல்படுத்தாவிட்டால்  நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்". மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும்".

அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் 3க்கு தள்ளிவைப்பு. கடலூரில் ஓரே நாளில் 13 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

*இயற்கை உப்பு விற்பனைக்கு விதிக்கப்பட தடைக்கு எதிராக வழக்கு.

மத்திய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. இயற்கை உப்பை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது, மனிதனுக்கு தேவையான அயோடினை வேறு வகையில் பெற முடியும் - மனுதார‌ர்.

*4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடின, மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன - சோனியா காந்தி. தலைநகரில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும் - மன்மோகன் சிங்.

*குயின் இணையதள தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர ஜெ.தீபாவுக்கு உரிமையில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனு.

*திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்.

கே.பி.பி. சாமியின் மறைவு திருவொற்றியூர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - ஆளுநர்.

*கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக  காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு.

இன்று மாலை 6 மணி முதல் தொடங்கும் - கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு. அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக எழுந்த குற்றச்சாட்டு. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டம் அறிவிப்பு.

*டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம்.

கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

*ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.32,512க்கு விற்பனை.

*வடகிழக்கு டெல்லி மற்றும் டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகளை சிபிஎஸ்இ ஒத்திவைத்துள்ளது.

*டெல்லியின் மற்ற பகுதிகளில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தேர்வின் அடுத்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*2018ஆம் ஆண்டு நீட் தேர்வு முறைகேடு சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன். சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை. வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் விவரத்தை அளிக்க
உத்தரவு.

*டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

*ஈரான் : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

துறைமுகங்களில் சிக்கியுள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூரைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களை மீட்குமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை.

*டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன்?

மதுக்கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி. டாஸ்மாக் கடை - விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.

*தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் கடைபிடிப்பதில்லை.

மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா?-சென்னை உயர்நீதிமன்றம்.

*தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் ‘100’ தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படாததால் மக்கள் அவதி!

*போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு  விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

*நிலத்தடி நீர் குறைவாக உள்ள இடங்களில் நீரை எடுக்க தமிழக அரசு தடை: தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் துவங்கியது.

*வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்வு.
டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வுக் குழுக்களை டெல்லி காவல்துறை அமைத்தது.

*தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் மார்ச் 1-ம் தேதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லவேண்டாம் - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

முக்கால் நூற்றாண்டு காலம் தமிழினத்திற்கும், மொழிக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் உடல் நலிவுற்று இருக்கிறார். தமிழர் நலனுக்காக தன்னை பேராசிரிய பெருமகனார் நலம் பெற நம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவோம்.பேராசிரியர் உடல் நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை - மு.க.ஸ்டாலின்.

*ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:

சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கையை பாராட்டி அரசு வழங்கிய நிலத்தை விற்பனை செய்த தொகைக்கு வரி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. வருமானவரித் துறை நோட்டீஸை எதிர்த்து விஜயகுமார் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages