அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம் சென்னையில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சியில் இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்தது சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்லவில்லை.
*சென்னை : டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடக்கம். முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்பட்டு கலந்தாய்வு துவக்கம்.
*சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரிய குற்றவாளி உமாபதியின் மேல்முறையீடு மனு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் 6வது நாளாக போராட்டம்.
*3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.
ஜம்மு காஷ்மீர் டிராலில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.
கீழடியில் தொடங்கவுள்ள ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
*இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக உள்ளது.
எங்களை காண 70 லட்சம் பேர் வருவர் என பிரதமர் மோடி கூறியதால் நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன் - அதிபர் ட்ரம்ப்.
*தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் 166வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் மரியாதை செலுத்தினர்.
*செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு விரைவில் நிரந்தர இயக்குனர் நியமனம் - அமைச்சர் பாண்டியராஜன். காஞ்சிபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தமிழாய்வு நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் - அமைச்சர் பாண்டியராஜன்.
*தமிழக அரசுக்கு விருது வழங்கும்போது சரியாக இருந்த மத்திய அரசின் புள்ளிவிவரம், இடைநிற்றல் விவரத்தில் மட்டும் தவறாக இருக்கிறதா? இடைநிற்றல் விவகாரம் மத்திய அரசின் புள்ளிவிவரம் தவறு என அமைச்சர் கூறியதற்கு எதிராக தங்கம் தென்னரசு பேரவையில் கேள்வி.
*பேரவையில்இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிப்பு. - முதல்வர் பழனிசாமி.
*உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்வு.
உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி. ஹஜ் பயணிகளுக்கு, சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு.
*இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் முதலமைச்சர் - நிலோஃபர் கபில் பேச்சு. இஸ்லாமியர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து நிலோஃபர் கபில் பேச்சு.
*கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களில் 6ஆம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமான தொடர்ச்சியை 6ஆம் கட்ட அகழாய்வில் அறிய திட்டம்.
*தொல்லியல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும், கோவை, மதுரை மையங்களில் நடைபெற இருந்த தேர்வு ரத்து - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
* டெல்லி சட்டப்பேரவை கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
*சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை:
2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
- சுகாதாரத்துறை.
*சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து 30 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
சொத்துவரி உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யும் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*டெல்லி முதல்வராக பதவியேற்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல்.
*விளையாட்டுத் துறைக்கு மத்திய அரசு பெரிதும் உதவி செய்து வருகிறது; மத்திய அரசு மேலும் உதவிகள் செய்வதன் மூலம் புதிய வீரர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
- பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து .
*பிரபல தவில் இசைக் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ. கலியமூர்த்தி காலமானார். 72 வயதான கலியமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தவில் இசைக் கலையின் அடையாளமாக விளங்கிய கலியமூர்த்தி 1981-ல் கலைமாமணி விருது பெற்றார்.
*அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மார்ச் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
மார்ச் 3-ல் நடைபெறும் அரசு தேர்வுகளை எழுதுவோருக்கு இது பொருந்தாது எனவும் அறிவிப்பு.
No comments:
Post a Comment