உலக சமூகநீதி தினம் பிப்ரவரி 20 - தமிழ்நாட்டின் சமூகநீதிக்காவலர்கள். - பாமக தலைவர் ஜி.கே.மணி
-------------------------------------------
சமூகநீதி என்றால் என்ன?
மக்கள் சேர்ந்து வாழும் தொகுப்பிற்கு, அதாவது மக்கள் கூட்டத்திற்கு சமூகம் என்று சொல்கிறோம். மக்கள் தொகுப்பில் அநீதி உள்ளது. நீதி வேண்டும். இதுதான் சமூகநீதி.
என்னென்ன?
மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் (வீடு), கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து போன்ற பல்வேறு நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுகள். மேடு பள்ளங்கள் நிறைந்துள்ளன. இது போக்கப்பட வேண்டும். எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். ஒவ்வொருவரும், ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு பெற வேண்டும்.
சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு. தந்தை பெரியாருக்கு பின் சமூக நீதிக்கு போராடுவது மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் என்பது நாடறியும்.
சமூக நீதியின் ஒரு அங்கம் தான் இட ஒதுக்கீடு மருத்துவர் அய்யா அவர்களின் இட ஒதுக்கீடு போராட்ட வரலாறும் நாடறியும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் MBC, BC, SC, ST, இஸ்லாமியர், கிறித்தவர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் உள்ள இடஒதுக்கீடு அளவு இதில் உள்ள மிகப்பெரிய குறைகள், குளறுபடிகள், கோளாறுகள் எல்லாம் சுட்டிக்காட்டி உண்மை புள்ளி விவரங்கள், ஆதாரங்களோடு தொடர்ந்து வாதாடி வந்தது இந்த ஜி.கே.மணி இட ஒதுக்கீடு குறைகளை போக்க சட்டமன்றத்தை தனியாகவே விவாதிக்க ஒரு நாள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வைத்து அதில் நீண்ட நேரம் புள்ளி விவரங்களோடு வாதாடி ஒரு வெள்ளை அறிக்கை சட்டமன்றத்தில் பெற்றதும் இந்த ஜி.கே.மணி. ஆனால் இன்னும் இட ஒதுக்கீடு குறைபாடுகள் போக்கப்படவில்லை.
எல்லா சமுதாய மக்களுக்கும் உரிய சமூகநீதி கிடைக்கப்பட வேண்டும். சமூக நீதி நிலைக்க, நீடிக்க பாடுபடுவோம். உறுதியேற்போம் ...
No comments:
Post a Comment