டெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி.
வெலிங்டன் டெஸ்டில் நியூசி., வேகங்கள் அசத்த, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தோல்வி.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி, 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 39 ரன்கள் பின்தங்கி இருந்தது. நான்காம் நாள் ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே, ரகானே (29 ரன்) பவுல்ட் வேகத்தில் வெளியேறினார். விகாரியை (15 ரன்) சவுத்தீ வெளியேற்றினார். அஷ்வின் (4 ரன்), இஷாந்த் (12 ரன்), பும்ரா(0) ஏமாற்றினர். பன்ட்(25 ரன்) ஆறுதல் அளித்தார். முடிவில், இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 8 ரன்கள் முன்னிலை பெற்றது. வேகத்தில் அசத்திய சவுத்தீ 5, பவுல்ட் 4 விக்கெட் கைபற்றினர். எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசி., அணி, 1.4 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நியூசி., அணிக்கு 100 வது டெஸ்ட் வெற்றி. இதனை 441 போட்டிகளில் நியூசி., அணி எட்டியுள்ளது. ஆட்ட நாயகன் விருது சவுத்தீக்கு வழங்கப்பட்டது._
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி அடைந்த முதல் தோல்வி இது. 8 போட்டிகளில் 7ல் வென்றுள்ள இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸி., 296 புள்ளிகளுடன் 2வது இடம் வகிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 120 புள்ளிகளுடன் நியூசி., 5வது இடம் பிடித்தது.
No comments:
Post a Comment